Others

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் (ABVS) – – சிறப்பு செய்தி..

*உச்சநீதிமன்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற வழக்கறிஞர்களுக்கு பாராட்டு*

அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் (ABVS) 2013-ல் தொடங்கப்பட்டது. இதில் தென் தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாடு என இரு பிரிவுகள் உள்ளன.ABVS சார்பில் கடந்த ஆண்டு இளம் வழக்கறிஞர்களுக்கான உச்சநீதிமன்ற பயிற்சி முகாம் ‘சுப்ரீம் விஷன்’ எனும் பெயரில் முதன்முறையாக தொடங்கப்பட்டது. இரண்டாவது பயிற்சி முகாம் கடந்த செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இதில் தென் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த 5 ஆண், 5 பெண் என மொத்தம் 10 இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இவர்கள் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, மூத்த வழக்கறிஞர்களின் உதவியாளர்களாக இணைந்துபணியாற்றினர்.டெல்லிஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற SUPREME VISION முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்த, அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் தங்கேஸ்வரி மற்றும் பெரியகுளம் தாலுகா இணை செயலாளர் வழக்கறிஞர் தீபா ஆகியோரை, சங்கத்தின் தலைவர் பாபு மற்றும் செயலாளர் ரதிதேவி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். உடன் மற்ற சங்க தலைவர் முத்துராமலிங்கம், சந்தான கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்துகளை தெரிவித்தனர். . . . . .

Related Articles

Back to top button
Close
Close