Others

காஞ்​சிபுரத்​தில் பொது​மக்​கள் சாலை மறியல்….

Kanchipuram station hi-res stock photography and images - Alamyகாஞ்​சிபுரம் உப்​பேரிக்​குளம் தெரு​வில் கடந்த 4 மாதங்​களாக சில பகு​தி​களில் தண்​ணீர் வரவில்​லை. சில பகு​தி​களில் விட்டு விட்​டுத் தண்​ணீர் வரு​கிறது. இது தொடர்​பாக மேயர் மற்​றும் மாநக​ராட்சி அதி​காரி​களிடம் முறை​யிட்​டும் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்லை என அந்​தப் பகுதி மக்​கள் புகார் தெரிவிக்​கின்​றனர்.மேலும் வனத்​துறை அமைச்​சரும், காஞ்​சிபுரம் எம்எல்ஏவு​மான ஆர்​.​வி.ரஞ்​சித்​கு​மார் அலு​வல​கத்​துக்கு புகார் அளிக்​கச் சென்றுள்ளனர். அமைச்​சர் இல்​லாத​தால் அலு​வல​கத்​தில் உள்​ள புகார் புத்​தகத்​தில் இவர்​கள் பிரச்​சினையை எழு​தி​யுள்​ளனர். ஆனாலும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. இதனால் ஆத்​திரம் அடைந்த அந்​தப் பகுதி பொது​மக்​கள் ஏகாம்​பர​நாதர் சந்நிதி தெரு பகு​தி​யில் திரண்​டனர்.பலர் காலி குடங்​களு​டன் வந்து சாலை மறியலில் ஈடு​பட்​டனர். தகவலறிந்து உடனடி​யாக சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீ​ஸார், மறியலில் ஈடு​பட்​ட​வர்​களிடம் சமரசப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அதி​காரி​களிடம் பேசி உடனடி​யாக குடிநீர் வழங்க ஏற்​பாடு செய்​வ​தாக போலீ​ஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்​கள் போராட்​டத்​தைக் கைவிட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close