Others

இரண்டு தொகுதிகளுக்கு, இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

இரண்டு தொகுதிகளுக்கு, இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. மதுராந்தகத்தில், 2.13 லட்சம் பேர் ஓட்டளிப்பதற்காக, 285 ஓட்டுச்சாவடிகள்; தாராபுரத்தில் 2.23 லட்சம் பேர் ஓட்டளிக்க, 320 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (த.வெ.க.), சுகன்யா (தி.மு.க.,), பானுமதி (அ.தி.மு.க.,), லட்சுமணன் (இ.கம்யூ.), கார்த்திகா (நாம் தமிழர்) உள்பட 22 வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 285 ஆண், 1 லட்சத்து 16 ஆயிரத்து 13 பெண், 8 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்கியது; மாலை 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (த.வெ.க.), பரந்தாமன் (தி.மு.க.,), கணிதா சம்பத் (அ.தி.மு.க.,), சுகந்தி (கம்யூ.), ஜானகிராமன் (நாம் தமிழர்) உள்பட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 886 ஆண், 1 லட்சத்து 8 ஆயிரத்து 738 பெண், 65 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் காலை 7 மணி முதல் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, 22% ஓட்டுப்பதிவாகி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close