பார்லி., நிலைக்குழுக்கள் மாற்றி அமைப்பு—விவரம்
ஆண்டுதோறும் பார்லி., நிலைக்குழுக்கள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். பிரதமர், மத்திய அமைச்சர்கள் என, அரசு தரப்பு நிர்வாகம் தாண்டி, அரசின் அலுவல்களை ஆய்வு செய்ய, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் அடங்கிய பார்லி., நிலைக்குழுக்கள்அமைக்கப்படுகின்றன.இக்குழுக்கள், ஆண்டு முழுவதும் அமைச்சகங்களின் பட்ஜெட், கொள்கைகள் மற்றும் சட்டங்களை மதிப்பாய்வு செய்வதில் கவனம் செலுத்துகின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் எம்.பி.,க்கள் அடிப்படையில் பார்லி., நிலைக்குழுவின் தலைவர் பதவி வழங்கப்படுகிறது.இந்த பதவிகளை பெற அரசியல் கட்சிகள் போட்டி போடும். எனினும், ஆளும் தரப்பின் ஆதரவோடு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர், தலைவர் பதவிகளுக்கு வருவதும் உண்டு. இது ஓராண்டு கால பதவி.இந்நிலையில், ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பல்வேறு துறை சார்ந்த பார்லி., நிலைக்குழுக்களை மாற்றி அமைத்து உத்தரவிட்டனர். அதன்படி, தி.மு.க., – எம்.பி.,க்கள் சிவா, கனிமொழி ஆகியோருக்கு மீண்டும் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., இரு முக்கிய நிலைக்குழுக்களின் தலைவர் பதவிகளை இழந்துள்ளது.வெளியுறவு விவகாரங்கள் குழுவின் தலைவராக லோக்சபா காங்., – எம்.பி., சசி தரூர் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். அக்கட்சியின் எம்.பி., சரண்ஜித் சிங் சன்னி,விவசாயத்துறைக்கானநிலைக்குழுவின்தலைவராகமீண்டும்நியமிக்கப்பட்டுஉள்ளார்.திரிணமுல் காங்., – எம்.பி டோலா சென் வசமிருந்த வர்த்தகத்திற்கான நிலைக்குழுவின் தலைவர் பதவியில், பா.ஜ., ராஜ்யசபா எம்.பி சுதான்ஷு திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார். திரிணமுல் காங்., – எம்.பி., கீர்த்தி ஆசாத் வகித்து வந்த ரசாயனம் மற்றும் உரங்கள் நிலைக்குழு தலைவர் பொறுப்பு, அக்கட்சியின் அதிருப்தியாளர் பிரிவின் தலைவர் ககோலி கோஷ் தஸ்திதாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளியுறவு விவகாரங்கள், சசி தரூர்-காங்., * விவசாயம், சரண்ஜித் சிங் சன்னி- காங்., * போக்குவரத்து- சஞ்சய் குமார் ஜா- ஐக்கிய ஜனதா தளம் * நிலக்கரி, சுரங்கம்- அனுராக் தாக்குர்- பா.ஜ., * சுகாதாரம், ராம் கோபால் யாதவ்- சமாஜ்வாதி * தொழில் துறை, சிவா- தி.மு.க., * கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், முகுல் வாஸ்னிக்- காங்., வர்த்தகம், சுதான்ஷு திரிவேதி – பா.ஜ., * தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், நிஷிகாந்த் துபே- பா.ஜ., * உள்துறை, ராதா மோகன் தாஸ் அகர்வால்-பா.ஜ., * நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வினியோகம், கனிமொழி- திமுக இவர்கள் முக்கிய அமைச்சகங்களுக்கான நிலைக்குழு தலைவர்கள்ஆவார்கள்..