திமுகவினருக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை….
அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம்குமரவேல்ஆதரித்துமுதலமைச்சர்விஜய்மதுராந்தகத்தில்பிரச்சாரம்மேற்கொண்டார்தமிழ்த்தாய் வாழ்த்துடன் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரதை முதலமைச்சர் விஜய் தொடங்கினார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆனந்த வரவேற்புரை ஆற்றினார். 1947இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றால் 2026இல் தான் தமிழ்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்றும் முதல்வர் விஜயின் பாதம் பட்ட மதுராந்தகம் தொகுதி இனி அவருடையகோட்டையாக மாறும் என்றும் மதுராந்தகத்தில் மீண்டும் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றும் அமைச்சர் ஆனந்த் பேசினார். முன்னதாக, முதல்வர் விஜய்க்கு வேட்பாளர் மரகதம் குமரவேல் வெள்ளி வேல் பரிசளித்தார்..இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பெண்கள் குறித்து பேசும் திமுகவினரை கடுமையாக எச்சரிப்பதாக முதலமைச்சர் விஜய் ஆவேசமாக தெரிவித்தார். விசில் சின்னத்திற்கு வாக்களித்த பெண்களை அவதூறாக பேசுவோருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், ‘என் மனதில் இருக்கும் பெரிய வேதனையான ஒரு விஷயத்தை ஷேர் செய்ய நினைக்கிறேன். தவெக அரசு மீது குற்றச்சாட்டு வைக்கமுடியாத விரக்தியில் என்னை பெற்ற தாயை பற்றி அவதூறாக பேசுகின்றனர். தாயை பற்றி பேசும்போதெல்லாம் கூட நான் பொறுத்துக்கொண்டேன். தமிழ்நாட்டில் உள்ள என் அம்மா, அக்கா என அனைவரையும் திமுகவினர் அவதூறாக பேசுகின்றனர்.தமிழ்நாட்டில் பச்சைக் குழந்தைகளை ஒருவன் பல வருடமாக சீரழித்துக் கொண்டிருந்தான். சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு திமுக ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டது. இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் சார் வாயை திறக்காதது ஏன்?. திமுகதான் வாயை திறக்கவில்லை என்றால் மற்றும் பலரும் அப்படித்தான் இருக்கிறார்கள். இதில் கூடவா கூட்டாக இருப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.இந்த பிரச்சார கூட்டத்தில் முன்னதாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்தார். திமுக தலைவர், பொதுச் செயலர்,
பொருளாளரின் மகன் என தோல்வியை சந்தித்தார்கள் என்றும் முதல்வர் விஜய் 12 இடங்களில் தான் பேசினார், திமுகவின் 15 அமைச்சர்கள் அவுட் ஆனார்கள் என்றும் கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எண்ணம் கூட இல்லை என்றும் சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட தவெகதான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் என்றும் பேசினார்.2025ஆம் ஆண்டு அக்டோபரில் வீரமணி மீது திமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டதாகவும், போக்சோ வழக்கு குறித்து நானும், நிர்மல்குமாரும் பேச தடை விதிக்க வேண்டும் என்கிறது என்றும் திமுக வரலாற்றிலேயே முதல்முறையாக ஏடிஜிபி மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்ததாகவும் வீரமணி மீதான வழக்கை திமுக ஆட்சியில் முடிக்கச் சொன்னது யார்? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், வீரமணி மீதான வழக்கை முடிக்க ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை பரிமாற்றம் செய்ததாகவும் கூறினார்.தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி எடப்பாடியில் வெற்றி பெற்றவர் பழனிசாமி என்றும் காணாமல் போன தவெக வேட்பாளர் அருண் குமார், பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்க்கப்பட்டார் என்றும் பேசிய ஆதவ் ஆர்ஜுனா, மதுராந்தகம் தொகுதியில் தவெக பெறும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வெற்றியாக மாற வேண்டும் என்றும் கூறினார்.