Others
தாராபுரத்தில், , இன்று மாலை முதல்வர் விஜய் பங்கேற்று பேச உள்ளார்…
தாராபுரத்தில், சித்தராவுத்தன்பாளையம் பகுதியில், இன்று மாலை பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். கூட்டத்தில், 10 ஆயிரம் பேரை அனுமதிக்கும் வகையில், இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, ‘கியூ ஆர்’ குறியீட்டுடன் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிரசார கூட்டத்தில் பங்கேற்க, சென்னையில் இருந்து தனி விமானத்தில், இன்று காலை கோவைக்கு முதல்வர் விஜய் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக, பிரசார திடலுக்கு சென்று, பிரசாரத்தை முடித்து விட்டு, இன்று இரவு சென்னைதிரும்புகிறார்.