Others

காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை–பா.ம.க. – எம்.எல்.ஏ., சவுமியா…

புதிய சட்டமன்றம் தேவை– பாமகவின் நிலைப்பாடு சவுமியா அன்புமணிதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில், எம்.பி., அன்புமணி, உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன கழிப்பறையை, தர்மபுரி, பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா திறந்து வைத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அனைத்து ஏரிகள் மற்றும் குளங்கள், அணைகள் துார்வார வேண்டும் என்பது தான், பா.ம.க.,வின் நீண்டநாள் கோரிக்கை. ஆற்றுப்படுகைகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். சட்டம், ஒழுங்கு பலவீனம் அடைந்ததற்கு காரணம் காவல்துறையில் ஏற்பட்டுள்ளஆட்கள்பற்றாக்குறையைசரிசெய்யாததுதான்.ஊர்க்காவல்படையில்அதிகளவில்பணியாற்றுகிறார்கள் அவர்களை முழுமையாக பயன்படுத்தினால், சட்டம், ஒழுங்கில் சிறப்பான இடத்திற்கு காவல்துறையை கொண்டு செல்ல முடியும். பா.ம.க., ஆரம்பித்த நாளிலிருந்து மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அனைத்து கட்சிகளும் மதுவை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்று ஒப்பு கொண்டுள்ளார்கள். த.வெ.க., தேர்தல் அறிக்கையில், மது ஒழிப்பைஅறிவித்திருக்கிறார்கள். மது ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து, பா.ம.க., குரல் கொடுக்கும்.இவ்வாறு,பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close