மாணவர்கள்குறைகளை தீர்க்கும் வகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை…
தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதி விடுதிகளில் உணவு, குடிநீர் உள்ளிட்ட குறைகள்இருப்பதாகமாணவர்கள் ஏராளமான புகார்களைஅடுக்கினர்.முதலமைச்சர் விஜய், சைதாப்பேட்டையில் உள்ள விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்அவற்றை உடனடியாக தீர்த்து வைக்க உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அடிக்கடி விடுதிகளில்ஆய்வுமேற்கொண்டுவருகிறார்.மாணவர்கள் தங்களது குறைகளை தீர்க்கும் வகையில் புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை சென்னைஎழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாணவர்களிடம் வீடியோ கால் வாயிலாக அமைச்சர் வன்னி அரசுஉரையாடினார்.உணவு, குடிநீர் சரியில்லை என அதிக அளவில் புகார் வருவதாக அவர் தெரிவித்தார். காலையில் வழங்கப்படும்.கிச்சடி, சேமியா ஆகியவற்றை மாற்றி வழங்கவும், கீரை உணவு வழங்கவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் வன்னி அரசுதெரிவித்தார்.
…
.
…