Others

இந்தியாவையே உலுக்கிய குற்றவாளி திடுக்கிடும் சம்பவங்கள்?– உங்கள்பார்வைக்கு…

இப்போது பரபரப்பாக பேசப்படும் ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு போல் 90களில் இந்தியாவையே உலுக்கிய குற்றவாளி #ஆட்டோசங்கர்புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் தண்டிக்கப்பட்டான்தமிழகத்தை உலுக்கிய எத்தனையோ கொலை, கொள்ளை, கடத்தல் , பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கேட்டிருக்கிறோம்… சமீபகாலங்களில் அதனை பார்க்கவும் செய்கிறோம்… நாகரீகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு கணமும் கண்டு பிடிப்புகளோடும், ஆக்கங்களோடும் புதிய உலகை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது மனிதர்களின் வாழ்க்கைஆனால், நம்முடைய நல்மனதுக்குள் ஆசைகளும் வஞ்சமும் நுழைந்து… போட்டியும் பொறாமையும் வளர்ந்து சமூகத்தில் நம்முடைய நிலையை மோசமான ஒரு பதிவாகவே விட்டுசெல்கிறது.அதற்கெல்லாம்காரணமாகஅமைந்துவிடுகிறதுபேராசைஇந்தசம்பவங்களின்பின்னணியில் ஒரு எடுத்து காடடாக 20ம் நூற்றாண்டில் ஒரு நபரை குறிப்பிட்டு சொல்ல முடியும் என்றால்.. சொகுசு வாழ்க்கைக்கும் சுகபோகத்துக்கும் ஆசைப்பட்டு கொலை, கொள்ளை என களத்தில் இறங்கி அடித்து, சிறை கம்பிகளுக்கு முன்னே தூக்கிலிட்டு கொல்லப்படட ஆட்டோ சங்கரை தவிர வேறு யாரும் அத்தனை பொருத்தமாய் இருக்கமாடடார்கள்தமிழகத்தின்தலைநகரத்தில் தொடங்கி தேசத்தை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள்1988ம் ஆண்டுமேமாதம்9ம்தேதிசென்னைமந்தவெளியைசேர்ந்தமோகன்,சம்பத்,கோவிந்தராஜ்ஆகியமூன்றுஇளைஞர்களைகாணவில்லைஎனஅவர்களதுகுடும்பத்தினர்கள்காவல்நிலையத்தில்புகார்அளித்திருந்தனர்  இங்கு தான் இந்த கதைக்கு ஆரம்ப புள்ளி எழுதப்பட்ட்து. காணாமல் போனவர்கள் வீடு திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அந்த புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதில் சம்பத் டெய்லர் தொழில் செய்து வந்தார். மோகன் பொதுப்பணித்துறையில் ஊழியராக இருந்தார். இவர்கள் இருவரின் நண்பர் கோவிந்தராஜ். இந்த மூவரும் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்திய திருவான்மியூர் போலீசார்அவர்கள் மூவரும் அப்போது பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்த ஆட்டோ சங்கரின் வீட்டுக்கு கடைசியாக சென்றதை கண்டுபிடித்தனர்.. ஆட்டோ சங்கரின் வீட்டுக்கு இவர்கள் சென்றதை அறிந்த போலீசார் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர்… போலீஸாரின் விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்கள்தமிழகத்தை உலுக்கும்வண்ணம்இருந்தன.இந்தசம்பவத்தில்காணாமல்போனமூன்றுநபர்களும்கண்டுபிடிக்கப்பட்டார்களா.? எனும் கேள்விக்கு விடை தேடும் முன்பாக ஆட்டோ சங்கர் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.1980 ஆண்டு காலகட்டம் என்பது தமிழகத்தில் சாராய வியாபாரம் கொடிகட்டி பரந்த நேரம் என சொல்லலாம் … அப்போதெல்லாம் மதுக்கடைகள் தனியார் வசம் இருந்ததால் மதுக்கடை நடத்துபவர்கள் அந்தந்த பகுதிகளில் குட்டி தாதாவாகவே வலம் வர தொடங்கியிருந்தார்கள்.கோவில் திருவிழா தொடங்கி , கட்சி கூட்டம் நடத்துவது வரை இவர்களின் நன்கொடைகள் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதால் காவல் துறையினரை கையில் போட்டுக்கொண்டு சாராய வியாபாரத்தில் கோடி கோடியாய் கொடி கட்டிப்பறந்தனர்.அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பலரில் குறிப்பிட்டு சொல்லும் படியாக இருந்தவன்தான்சென்னைதிருவான்மியூரைசேர்ந்த ஆட்டோஷங்கர்.இவனைதெரியாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவுக்கு திருவான்மியூர் சுற்று வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவனாகவும், பணபலம் படைத்தவனாகவும் இருந்தான் ஆட்டோ சங்கர்..கௌரி சங்கர் எனும் இயற்பெயர் கொண்ட ஆட்டோ சங்கர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவன். சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து டீ கடை வைத்திருந்தார் ஆட்டோ சங்கரின் தந்தைEp 115 - Auto Shankar - Serial Killer 💀, 7 Day 7 Reels - Day 1 !, Follow for more creepy videos 👾, #ghost #ghoststories #scary #scaryvideos #horror #horrorfilm #explorepage✨ #trendingreels #viralreels தங்கராஜ். இங்கு வந்த பிறகு வேலூரை சேர்ந்த ஜெயலட்சுமியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.இந்ததம்பதிக்குபிறந்தவன்தான்சங்கர்.ஆனால் சில ஆண்டுகளிலேயே ஜெயலட்சுமி பிரிந்து சென்று வேறொருவரைதிருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் தான் சங்கர்தந்தையால்வளர்க்கப்பட்டான். சங்கருக்கு சிறு வயதிலேயே பணக்காரனாக வாழ வேண்டும் என்கிற ஆசை தொற்றி கொண்டுவிட்ட்து. அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய தீர்மானித்திருந்தான்.பியுசி வரை படித்திருந்த சங்கருக்கு அதற்கு மேல் படிப்பில் நாட்டமில்லாததால், ஆட்டோ ஓட்டும் நண்பர்களின் அறிமுகம் இருந்ததால் தானும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபடுவதெனமுடிவெடுத்தான்.இப்படித்தான் #ஆட்டோசங்கர் ன் முன் கதை சுருக்கம் ஆரம்பிக்கிறது.நாளுக்கு நாள் ஆட்டோ தொழில் போரடித்த நிலையில் சாராயம் கடத்துவதில் ஈடுபட்டான்.தமக்குஆங்கிலம்தெரிந்திருந்ததால் அதனைக்கொண்டுசாராயவியாபாரிகளிடம் நட்பு வளர்த்து கொண்டான். திருவான்மியூரில் இருந்து கோவளம் கடற்கரைக்கு சாராயம் கடத்தினால் கிடைக்கும் வருமானம், பல மடங்கு அதிகம் இருந்ததால் அந்த தொழிலையே பிரதான தொழிலாக மேற்கொண்டான்இருபத்து நான்கு மணி நேரமும் கையில் பணம் புரண்டதால் முழு குடிகாரனாக மாறியிருந்த சங்கருக்கு நாளடைவில்பெண்கள்சமாச்சாரமும், அதனைத்தொடர்ந்துவெளிமாநிலங்களில்இருந்துபெண்களைகடத்திவந்துபாலியல்தொழில்செய்வதிலும்தன்னைஈடுபடுத்திகொண்டிருந்தான்சங்கர்.முக்கியபிரமுகர்களுக்குபெண்களைஅனுப்பும்போது,அவர்களுக்குதெரியாமலேயேஅதனைவீடியோஎடுத்துகிடைக்கும்சமயத்தில்அவர்களைமிரட்டிபணம்பறிக்கும்வேளையிலும்ஈடுபட்டான்ஆட்டோதொழிலைநிறுத்தியபின்னரும்இவனுடையஅடையாளமாக இருந்தது ஆட்டோ எனும் அடைமொழி. அந்த பெயரை கேட்டால்அப்பகுதியில்உள்ளவர்களுக்குஒருஉருவம்மனதுக்குள்வந்துபோகும்அளவுக்குதன்னைஅடையாளப்படுத்திகொண்டிருந்தான் சங்கர்ஆகவே தான் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்திபெரியபுள்ளிகள்,காவல்அதிகாரிகளைகவனித்துபாதுகாப்புவளையத்தைஏற்படுத்திகொண்டான்இதுபோதாதென்று ஏழை குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டுவதுஆட்டோ சங்கரின் இன்னொரு பக்கம் | vikatan library auto sankar - Vikatan உள்ளிட்ட சில நல்ல காரியங்களையும் செய்து கொண்டிருந்ததால், அந்த சமயத்தில் காணாமல் போன மூன்று பேர் குறித்து ஆட்டோ சங்கரிடம் விசாரிக்க போலீசார் யோசித்தனர்.ஒரு வழியாக சங்கரை நெருங்கிய போலீசார், காணாமல் போன மூவரும் கடைசியாக உங்கள் வீட்டுக்குத்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா…? தெரிந்தால் சொல் என்கிறார்கள்…. அதற்கு ஆட்டோ சங்கர்.. அப்படியா.? எனக்கு தெரியாதே.. அப்படி யாரும் இங்கு வரவில்லையே… என்று கொஞ்சமும் பதட்டமில்லாமல் கூறி வைத்தான்.ஆனால், போலிஸாருக்கு சந்தேகம் என்னவோ ஆட்டோ சங்கரின் மேல்தான். என்ன செய்யலாம் என யோசித்தகாவல்துறையினர் சங்கரின் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் உள்ளிட்டோரை மடக்கி விசாரணையை தொடர்ந்தனர். இவர்களை கண்காணிக்க பல்லாவரம் ஆய்வாளர் தங்கமணி நியமிக்கப்பட்டார்.இந்த நிலையில் தான் விசாரணையில் மணியும்,ஜெயவேலும்உண்மையை மறைத்து விட பாபு நடந்த அனைத்தையும் உளறி கொட்டினான்.. பாபு கூறியதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் காவல்துறை அதிகாரிகள்ஆட்டோ ஷங்கருடன் இணைந்து, சம்பத், மோகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 5 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான் பாபு. எதிர்பார்க்காத இந்த பதிலை கேட்டு தூக்கிவாரி போட்டதுபோலீசாருக்கு.பாபுவின்வாக்குமூலத்தைஅடிப்படையாக கொண்டுசென்னைதிருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள தெனாலி கால்வாய்க்கு அருகே இருந்த பெரிய குடிசை வீட்டுக்குள் நுழைந்தனர் போலீசார்தோண்ட தோண்ட வரிசையாக அழுகிய நிலையில் 3 பிணங்களை கண்டெடுத்த பொலிஸாருக்கு தலை சுற்றியது என்றே சொல்லலாம். இதுமட்டுமல்லாமல் அருகேயிருந்த குடிசை வீட்டின் பின்புறமும் தோண்டும் படலம் தொடர்ந்தது அங்கேயும் ஒரு பிணம். ஒரே நாளில் 4 சடலங்கள் தோண்டி எடுக்கப்படட சம்பவம் செய்திகளில் பரவ தமிழகம் பரபரப்பாகியது.இது தொடர்பான விசாரணையில் சம்பத், மோகன், கோவிந்தராஜ் மட்டுமல்லாது மேலும் இருவர் கொள்ளபட்டதில் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பதும் மற்றொருவர் பாலியல் தொழிலுக்கு பெண்களை கொண்டுவரும் சுடலை என்பதும் தெரிய வந்தது. மேலும் 4 பேரை புதைத்துவிட்டு சுடலையை எரித்து கடலில் கரைத்து விட்டதாகவும் தெரிவித்தனர்இந்த வழக்கில் கடந்த 1988ம் ஆண்டு ஆட்டோ சங்கரும் அவனுடைய தம்பி மோகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 3பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களையும் சேர்த்து 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உயிரிழந்த நிலையில், அவருடைய மனைவி ஜானகி அம்மாள் தலைமையிலான ஆட்சியும் பெரும்பான்மையின்றிஆட்சிகவிழ்ந்துதமிழகத்தில்ஆளுநர்ஆட்சிநடந்துகொண்டிருந்தது.அந்ததருணத்தில்தான்இதுபோன்றகொலைசம்பவங்கள்குறித்தசெய்திகள்வெளியாகிபரபரப்பைஏற்படுத்தியதால்இதுகுறித்துஉடனேவிசாரிக்கும்படிஆளுநர்பி.சி.அலெக்ஸ்சாண்டர்உத்தரவிட்டார்.இந்நிலையில் சங்கரின் நண்பர்களில் ஒருவரான பாபு அப்ரூவராக மாறிவிட, அடுத்தகட்டவிசாரணையைதொடங்கினார்கள்போலீசார்.சங்கரின்மனைவியிடமும்,பாலியல்தொழிலில்ஈடுபடுத்தப்பட்ட பெண்களிடமும் விசாரணை நடைபெற்றது. பிணங்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன..சங்கரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அவனுடைய டயரியில் அரசியல் புள்ளிகள், காவல் அதிகாரிகள்ஆட்டோ சங்கர் பாணியில்... உள்பட பலருக்கு பணம் கொடுத்த விவரங்கள் தெரிய வந்தன. தன்னுடைய காதலிகளோடு சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களோடு அவனுடைய மெத்தையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.ஆனால், கடைசி வரையிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தொடர்பான உண்மைகள் வெளியில் வராத வண்ணம் பார்த்து கொண்டனர் போலீசார் என கூறப்படுகிறது.சங்கரும் அவனுடைய தம்பியும் இணைந்து தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து 6 பேரை கொலை செய்ததில் 6 வதாக கொலை செய்யப்பட்டவர் சங்கரின் 4 வது மனைவி லலிதா. அப்போது, சங்கருக்கு நிறைய காதலிகள் இருந்தனர்.சங்கர்தன்னுடையகாதலிகள்மற்றும்மனைவிகளின் பெயரை உடம்பில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது லலிதா காணாமல்போனதுகுறித்தும்போலிஸாருக்கு சந்தேகம் எழுந்ததுஆனால், சங்கர் மீதான கொலைக்கு குற்றங்களுக்கு பயந்து லலிதா தலைமறைவாகி இருக்கலாம் என முன் அனுமானத்தில்அதனைகவனிக்காமல்விட்டிருந்தனர். ஆனால், லலிதாவும் கொலை செய்யப்பட்டார் என்கிற உண்மை விசாரணையின் பின்னரே தெரிய வந்தது.திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள அம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டில், சமையலறையின் கீழே, நிர்வாண கோலத்தில் லலிதா புதைக்கப்பட்டது சங்கரின் தம்பி அளித்த வாக்குமூலத்திற்கு பின்னரே தெரிய வந்தது.பெங்களூரை சேர்ந்த லலிதா, தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை, திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி, மந்தவெளியை சேர்ந்த சம்பத், பொதுப்பணித்துறை ஊழியர் மோகன், மந்தைவெளி கோவிந்தராஜ்ஆகிய6பேர்சங்கரின்பணமோகத்தால்,பெண்கள்மீதானகாமுகசிந்தனையாலும்கொ’ல்*லபட்டார்கள்.இதுதொடர்பான விசாரணையில் 6 போரையும் கொன்றது குறித்து விலாவரியாக தெரிவித்திருந்தான் சங்கர். வேலூரை சேர்ந்த ஜெகதீஸ்வரியை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட சுமதி, சுந்தரி ஆகியோரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தான்.சுமதியையும் சுந்தரியையும் தொழிலுக்கு அறிமுகம் செய்து வைத்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை தமக்கு தெரியாமல் அவர்கள் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் சுடலையை கொன்று எரித்து அவனுடைய சாம்பலை கடலில் கரைத்ததாக கூறியுள்ளான்..இதேபோன்று சுடலை காணாமல் போனதாக தேடி வந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியையும் கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தான் . மந்தவெளியை சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகிய மூன்று பேரை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு… அவர்கள் மூவரும் ஒவ்வொரு முறையும் இங்கு வந்து செல்லும் பொழுதும் பணம் கொடுப்பதில் தகராறு செய்ததாகவும் ஆகையினால் அவர்களையும் திட்டமிட்டு போட்டு தள்ளியதாக கூறியிருக்கிறான் சங்கர்.இந்நிலையில் சங்கரின்சின்ன சின்ன ஆசை: வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 3) நான்காவது மனைவியும் ஆசை காதலிகளில் ஒருத்தியான லலிதாவை கொன்றது குறித்து, சங்கரின் தம்பி மோகன் வாக்குமூலம் அளித்தான். அதில், பெங்களூருவை சேர்ந்த லலிதாவை ஆட்டோ ஓட்டுநர் சுடலைதான் சங்கருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் லலிதாவின் அழகில் மயங்கிய சங்கர் சுமதி, சுந்தரியை போன்று லலிதாவையும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினான். அனால், சங்கரின் முரட்டு தனமான நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த லலிதா சங்கரை விட்டு சுடலையோடு ஓட்டம் பிடித்ததால் சுடலை மீது சங்கர் கோபத்தில் இருந்ததாக கூறியுள்ளான்.இதனையடுத்து பல்லாவரத்தில் சுடலையுடன் தங்கியிருந்த லலிதாவை சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்தே சுடலையை கொன்று எரித்தாகவும், ஆத்திரம் தீராத சங்கர் லலிதாவையும் கழுத்தை நெரித்து அடித்து கொன்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிய வந்தது.இந்த கொலை குற்றங்கள் தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை 2 வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. சங்கர் உளப்பட 10 பேர் மீது 1100பக்கம்அளவிலானகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆள் கடத்தல், சாட்சியங்களை மறைத்தல், கலவரம் செய்தல், சதி செய்தல் உள்ளிட்ட 6பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு கூடுதல் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது9 நடுவர் மன்ற நீதிபதிகள், 5 காவல் ஆய்வாளர்கள், நடிகை புவனி உள்பட உள்பட 134 பேர் சாட்சியம் அளித்தனர். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி ஆட்டோ சங்கர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த பட வேண்டும். வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருந்த நிலையில், ஆட்டோ சங்கர் உள்ளிட்ட 5 பேர் சென்னை மத்திய சிறையில் இருந்து தப்பியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தின.சங்கர் தொடர்பான விவகாரத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சங்கர் இருந்தது என்னவோ சிறைதான் என்றாலும், அவனுடைய பண பலமும், அவனுக்கிருந்த செல்வாக்கும் சிறையில் அவனுக்கென தனி சுதந்திரத்தை வழங்கியிருந்தது என்பதை மறந்து விட கூடாதுஆகவேதான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் போது கூட காவல்துறையினர் சங்கருக்கு நெருக்கடி கொடுத்ததில்லை. ஒரு முறை மத்திய சிறையில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றபோது கோட்டூர் புறத்தில் உள்ள வீட்டுக்கு சென்று சாவகாசமாக சாப்பிட்டுவிட்டு சென்றதெல்லாம் சங்கருக்கும் காவலர்களுக்குமான நெருக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டினஅந்த வகையில் சிறையில் இருந்து சங்கர் தப்பிப்பதற்கு சிறைத்துறை அதிகாரிகள் சிலர் உதவியிருப்பார்கள் என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்ததுஇதுமட்டுமல்லாமல் சிறையில் இருந்த கணபதி என்பவரை சந்திக்க அவரது மனைவி தேவி வரும் சமயங்களில் தேவியுடன் சங்கர் பேசி வந்துள்ளார். பெண்களுடன் அதிகளவில் நேரத்தை செலவிடும் சங்கர் அங்கும் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார்.நாளைடைவில் கணவனை பார்க்க தவறிய தேவி சங்கரை சந்திப்பதை வழக்கமாகி கொண்டுள்ளார். இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்த சங்கரின் முதல் மனைவி ஜெகதீஸ்வரி – தேவியுடன் கட்டி புரண்டு சிறை வாசலிலேயே சண்டை போட்டதும், அதனை காவல் துறை அதிகாரிகள் விளக்கி விட்டதும் நடந்திருக்கிறது.இந்நிலையில் தான் சிறையில் இருந்து சங்கர்உள்ளிட்டோர் தப்புவதற்கு தேவியை பயன்படுத்தி கொண்டனர். சங்கரின் மீதான ஆசையில் தேவி இவர்களோடு இணைந்து செயல்பட்டார். இவர்களை பிடிப்பதற்கு, சிறைத்துறைசிபிசிஐடி , மாநகர காவல் துறை என 3 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தினர்.தனிப்படை போலிஸாரின் தேடுதலில் சங்கருக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் ராஜாவும், சுண்டல் குமாரும் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒடிசா சென்ற தனிப்படை போலீசார்ரூர்கேலாஅருகேஒருவீட்டில்பதுங்கியிருந்தசங்கரைசுற்றிவளைத்தனர்.கணபதியின் மனைவி தேவியை திருமணம் செய்து அவருடன் வாழ ஆரம்பித்திருந்த சங்கரை சிறையில் இருந்து தப்பிய 12 நாட்களில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விமானம் மூலமாக அவர்கள் இருவரும் சென்னை கொண்டுவரப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டான் சங்கர். சங்கரின் தம்பி மோகனும், கூட்டாளி செல்வராஜும் தலைமறைவாக இருந்ததால் அவர்கள் தொடர்பான வழக்கு தனியாக நடைபெற்றது.இறுதியில் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் உள்ளிட்ட 8 பேரும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றே அப்போதும் தெரிவித்தனர்.8 பேர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் செய்யாத கொலைக்கு தங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், நிரபராதியான தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.இதனையடுத்து கொலையானவர்களின் மண்டையோடுகள் சூப்பர் இம்போசிஷன் முறையில் ஆய்வுசின்ன சின்ன ஆசை: வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 5) செய்யப்பட்டு கொலை உறுதிப்படுத்தப்பட்டது. இதில் ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோரின் தூக்கு உறுதி செய்யப்பட்டது. தண்டனை பெற்றதில் பழனி பரமசிவம் ஆகியோரின் ஆயுள் தண்டனை மட்டும் ரத்து செய்யப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்தும், ஆட்டோ சங்கர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதில் வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த சினிமாக்களின் பாதிப்பால் தான்இந்தகொலைகள்நடந்ததகாகவும்,இதற்குசினிமாதயாரிப்பாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தது. இதனை ஏற்கமறுத்தநீதிபதிகள், சங்கர், எல்டின் இருவரின் தூக்கை உறுதிசெய்தனர்.மேலும், சினிமா தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்த நீதிபதிகள், கலை கலாச்சாரத்தை வளர்க்க வேண்டிய சினிமா சமீப காலங்களில் வன்முறை மற்றும் ஆபாசத்தை முன்வைக்க எடுக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.இந்த நிலையில், தூக்கு மேடையில் நிற்கும் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் எனும் தலைப்பில் நக்கீரன் இதழ் தொடர் வெளியிட்டு பரபரப்பைஏற்படுத்தியது. இந்த தொடர் வெளிவராமல் தடுக்க பல்வேறு முட்டுக்கட்டைகளும் போடப்பட்டன. ஆனால், அவ்வாறு தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது. 1994ம் ஆண்டுA Conceptual Image of Law and Order 25431950 Vector Art at Vecteezy அக்ட்டோபர்7ம்தேதிவெளியானஅந்ததீர்ப்புஇன்றளவும்சடடமாணவர்களின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.தனக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட பின்னரும் கூட ஆட்டோ சங்கர் தாம் விடுதலை செய்யப்படுவோம் என நம்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா நிராகரித்தார். இதனை அடுத்து 1995ம் ஆண்டு ஏப்ரல்மாதம்27ம்தேதிசங்கரைதூக்கிலிடஉத்தரவிடப்பட்டது.  கடைசி வரையிலும் தூக்கிலிருந்து தப்பிக்க சங்கர் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமே இருந்தது.ஆனால்,அனைத்துகதவுட்டுகளும் அடைபட்ட நிலையில் 1995ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி அதிகாலை 5.14 மணிக்கு ஆட்டோ சங்கருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்டினுக்கு 28ம் தேதிகாலைமதுரைசிறையில்தூக்குதண்டனைநிறைவேற்றப்பட்டது.சங்கரை இளம் வயதில் தந்தையுடன் தவிக்க விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்ட சங்கரின் தாயார், சேலம் சிறைக்கு வந்து சங்கரின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். சங்கரின் உடல் அவரது முதல் மனைவி ஜெகதீஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த அழுகையில் ஒருவருக்கும் அனுதாபம் ஏற்படாமல் போனது பிறவி பயனன்றி வேறல்ல என்றே கூற வேண்டும்..ஒரு மனிதன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்கான அடையாளமாக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை அமைந்துவிட்டது துரதிருஷ்டவசமானது என்றாலும், 20 நூற்றாண்டின் மிகப்பெரும் கொலை குற்றவாளிகளில் ஒருவரான ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி தொலைக்காட்சிகளில் தொடராகவும், பின்னாளில் திரைப்படமாகவும் வெளிவந்தன..

மீள்பதிவு..

.

Related Articles

Back to top button
Close
Close