fbpx
Others

ஒரு அரசியல் பார்வை — Dr.கே.ஜி. அருண்ராஜ் ( IRS ) to ( T.N Health Minister )

அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ஆட்சி இல்லை: டாக்டர் கே.ஜி.அருண்ராஜ்1979 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிறந்த டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், தமிழகத்தின் மிக உயரிய மருத்துவக் கல்வி நிறுவனமான மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தனது எம்.பி.பி.எஸ் (MBBS) படிப்பை வெற்றிகரமாக முடித்தார். படிப்பை முடித்தவுடன் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கி ஓடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படி, கடந்த 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை தாலுக்காவிலுள்ள கக்கதாசம் என்ற மிகச் சிறிய கிராமத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக தன் பணியைத் தொடங்கினார். மக்களுக்கு இன்னும் பெரிய அளவில், பரந்த அதிகாரத்துடன் சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கில், 2009 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் (UPSC) தேர்வெழுதி இந்திய வருவாய் சேவையில் (IRS) இணைந்தார். அரசு நிர்வாகத்தில் நேர்மை மற்றும் அசாத்திய துணிச்சலுக்குப் பெயர் பெற்ற அதிகாரியாகத் திகழ்ந்த அருண்ராஜ், 2016-ல் நாடு தழுவிய அளவில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரியாகப் (Income Tax Investigation Officer) பொறுப்பு வகித்த அவர், 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் பீகார் முதல் மகாராஷ்டிரா வரை பல முக்கிய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்தார்.குறிப்பாக, ஒரே ஒரு அதிரடி ரெய்டில் சுமார் ரூ.135 கோடி கறுப்புப் பணம் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்து, ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.கையில் அசைக்க முடியாத அதிகாரமும், உயரிய சிவில் சர்வீஸ் பதவியும் இருந்தபோதிலும், மக்களுக்காக நேரடியாகக் களத்தில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை அவரிடம் குறையவில்லை.இதன் காரணமாக,Ex-IRS அதிகாரி K.G. அருண்ராஜ்-TVK-வில் புதிய நியமனம் - TN Talks 2025ஆம்ஆண்டுதனதுமதிப்புமிக்கIRSபதவியைராஜினாமாசெய்தார்.தொடர்ந்து, தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கத் தயாரான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) தன்னை இணைத்துக் கொண்டு அதிகாரப்பூர்வமாக அரசியலில் தடம் பதித்தார் தவெக-வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட அருண்ராஜ், தமிழகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த பல உலகத்தரம்வாய்ந்தமுக்கியத்திட்டங்களைவடிவமைத்துவிஜய்யின்பாராட்டுகளைப்பெற்றார்.கட்சியின் கொள்கைகளைத் தொண்டர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்கும் மிக முக்கியப் பொறுப்பான கொள்கைப்பரப்பு பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு தீவிரமாகப் பணியாற்றினார்.அரசியல் சதுரங்க ஆட்டத்தின் நகர்வுகளின் தொடர்ச்சியாக, தற்போது தமிழக அமைச்சரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக (HealthMinister)டாக்டர்கே.ஜி.அருண்ராஜ்பொறுப்பேற்றுள்ளார்.20ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை மக்களுக்குச் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர்,இன்றுஒட்டுமொத்ததமிழ்நாட்டின்மருத்துவத்துறையையும்,மக்களின்நல்வாழ்வையும்வழிநடத்தும் மிக உன்னதமான அமைச்சராக உயர்ந்துள்ளார்.தான் ஒரு ஐஆர்எஸ் அதிகாரியாகக் கற்ற நிர்வாகத் திறனையும், ஒரு மருத்துவராகத் தனக்கிருக்கும் கள அனுபவத்தையும் முதலீடாகக் கொண்டு, தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளை உலகத் தரத்திற்கு உயர்த்த அவர் தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close