பாஜக ( வந்தேமாதரம் ) குற்றசாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு விவரம்…..

நாட்டின் 80வது சுதந்திர தினம் காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் இன்று நடைபெற்றது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. பாடலின் இடையே குறுக்கிட்டு சோனியா காந்தி ஏதோ சைகை செய்தார். அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்ட கார்கே, ராகுல் காந்தியிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சோனியா காந்தியிடம் ஏதோ கூறினார்.எனினும், வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்டது.இதையடுத்துகார்கே,தேசியக்கொடியைஏற்றிசிறப்புரையாற்றினார்.இந்நிலையில், வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், “சுதந்திர தினமான இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ள காட்சி மிகவும் அவமானகரமானது.இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படும்போது சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததும், அது ஏன் இசைக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தொண்டர்களிடம்கேள்விஎழுப்பியதும்காங்கிரஸ்கட்சியின்மனநிலையைவெளிப்படுத்துகிறது, ‘வந்தே மாதரம்’ என்பது வெறும் பாடல் மட்டுமல்ல, அது இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், தேசிய உணர்வு மற்றும் தேசபக்தியின் வரலாற்றுச் சின்னம். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்திற்கு உரிமை கோரும் அதே காங்கிரஸ் கட்சிதானா இது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜகவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “காங்கிரஸ் தலைவர் கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால், அவருக்கு ஒரு நாற்காலியை வழங்குமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டிருந்தார்,” என்று அவர் கூறியுள்ளார்.மேலும் அவர், “1937-ஆம் ஆண்டு அக்டோபர் 28-அன்று கல்கத்தாவில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு, கோவிந்த் வல்லப் பந்த், சி. ராஜகோபாலாச்சாரி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் ஆலோசனையின் பேரில், காங்கிரஸ் கூட்டங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆரம்பப் பகுதிகள் மட்டும் பாடப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.’வந்தே மாதரம்’ பாடலின் முதல் சில பத்திகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தாகூர், நேரு மற்றும் போஸ் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கினார். அப்போதிருந்து ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த வரிகளை நாங்கள் பாடி வருகிறோம்எங்கள் சேவா தளம் மற்றும் தொண்டர்கள் அதைப் பாடுகிறார்கள்; இதில் எந்த சர்ச்சையும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.இந்த சமாதான முயற்சியை ஏற்க மறுத்துள்ள பாஜக, வாக்கு வங்கி மற்றும் திருப்திப்படுத்தும்அரசியலுக்காக ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவத்தைப் பாடுவதைத் தடுக்க சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில், “அன்டோனியோ மைனோவுக்கு (சோனியா காந்தியின் இயற்பெயர்) ‘வந்தே மாதரம்’ மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? வந்தே மாதரம்’ பாடப்பட்டபோது, அன்டோனியோ மைனோ மிகவும் கோபமடைந்து, பதற்றமடைந்து, அதை நிறுத்துமாறு கட்சித் தொண்டர்களிடம் கூறியதாகத் தெரிகிறது. ‘வந்தே மாதரம்’ மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தேசிய கீதமான ‘ஜன கண மன’-க்கு இணையான அந்தஸ்தை ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றிய சில நாட்களிலேயே இந்தக் சர்ச்சை எழுந்துள்ளது. புதிய சட்டத்தின்படி, முழுமையான தேசியப் பாடலுக்கும் இப்போது மரியாதை அளிக்கப்பட வேண்டும்; வேண்டுமென்றே இடையூறு செய்வது அல்லது தொந்தரவு செய்வது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.