fbpx
RETamil Newsஇந்தியா

நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய 50 நண்பர்கள்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மெந்தார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவுரங்கசீப். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார்.

ஜூன் மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் அவுரங்கசீப் கடத்தி சென்று சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அறிந்த நண்பர்கள் 50 பேர் தங்கள் பணியை விட்டு சவுதிஅரேபியாவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்., கொலைக்கு காரணமான பயங்கரவாதிகளை பழிவாங்குவதே எங்களின் லட்சியம் என கூறியுள்ளனர்.

நண்பர் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்க ராணுவம் மற்றும் போலீசில் சேர உள்ளோம் என்று நண்பர்கள் உறுதிமோழி எடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close