40 கிலோ கஞ்சா கடத்திய ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை…
சென்னை செங்குன்றம் காவாங்கரை பகுதியைச் சேர்ந்த செல்வம் (55) என்பவர், கடந்த 2023 மார்ச் மாதம் சாந்தோம் விளையாட்டு திடல் அருகே, கஞ்சா கடத்தி வருவதாக பட்டினப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.சென்னை செங்குன்றம் காவாங்கரை (லூர்து மாதா கோவில் தெரு) பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வம். தனது ஆட்டோ
வில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் இருந்த 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். பின்னர், போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ்அவர்மீதுவழக்குபதிவுசெய்யப்பட்டதுஇந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருட்கள்கடத்தல்தடுப்புவழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன்முன்விசாரணைக்குவந்தது.காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.உதயகுமார் ஆஜராகி, ஆட்டோவில் இருந்த 2 பைகளில் 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மனுதாரருக்கு எதிராக இருப்பதால் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை. தான் நிரபராதி என்று வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.இருதரப்புவாதங்களையும்கேட்டநீதிபதி,இந்தவழக்கில்குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.