fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம்…! ஏஐசிடிஇ அறிவிப்பு!

MCA course reduced to 2 years

டெல்லி;

3 ஆண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

எம்சிஏ படிப்பு தற்போது மூன்று ஆண்டுகள் படிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பொதுவாக முதுநிலை பட்டங்கள் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் எம்சிஏ மட்டும் 3 ஆண்டுகள் இருப்பதால் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு கால தாமதமாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந் நிலையில் மூன்று ஆண்டுகளாக இருந்து வரும் எம்சிஏ படிப்பு வரும் 2020-2021கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close