சேப்பா அகாடமி நியூ எங் பவுண்டேஷன் கராத்தே, சிலம்பம் பயிற்சி நிறைவு விழா !
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அருகே சேப்பா அகாடமி நியூ எங் சோட்டாகான் கராத்தே பவுண்டேஷன் 20ம் ஆண்டு கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா மாஸ்டர். ராஜா, சங்கீதா ஏற்பாட்டில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக ஆவடி உதவி ஆணையாளர். கனகராஜ்மற்றும் எச். வி. எஃப் இணை மேலாளர். ,நீல்கமல் தியாகி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.ஒரு மாத பயிற்சி பெற்ற கராத்தே மற்றும் சிலம்பம் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.கராத்தே கற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.கராத்தே பயிற்சி தகுதிக்கு ஏற்ப வண்ண பெல்ட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும், பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.கடந்த வாரம் ஸ்ரீலங்காவில் நடந்த கராத்தே போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு இங்கு பயின்ற மாணவ, மாணவிகள் பதக்கங்கள் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது