மனைவிக்காக முதியவரின் சைக்கிள் பயணம்

ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் புற்று நோயால் பாதித்த தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்க கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச்சென்று முதியவரின் செயல் நெகிழ வைக்கிறது..
ஊரடங்கு காரணத்தால் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் புற்று நோய்யால் பாதிப்படைந்த தன் மனைவியை காப்பாற்ற கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளில் அழைத்துச் சென்ற முதியவர்…

கொரோனா காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கி இருப்பதால் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த அறிவழகன் இவருக்கு வயது 65 , இவரது மனைவி மஞ்சுளா க்கு வயது 60 இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் அவருக்கு நோய் முற்றிய நிலையில் அவரது ஈமோதெரப்பி சிகிச்சை கொடுக்க வேண்டும், அதனால் புதுச்சேரி ஜிப்சர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.
ஊடரங்கு சப்தத்தால் தமிழகம் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுல்லது, மருத்துவர்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் புதுச்சேரி எப்படி செல்வது என்று புரியாமல் தவிக்கிறார்கள்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு வசதி இல்லை , ஊடரங்கு முடிந்தபின் செல்லலாம் என நினைக்கும் அளவுக்கு மனைவியின் உடல் சரி இல்லை, நோயுற்று மனைவி வலியால் துடிப்பதை பார்க்க அளவுக்கு இவருக்கு சக்தி இல்லை.
ஆனால் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று நினைத்து முதியவர் அறிவழகன் துணிந்து அந்த முடிவை எடுத்தார்…
தன்னிடம் இருந்த மிகவும் பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்க அழைத்து செல்ல முடிவு செய்தார். கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு எத்தனைகிலோமீட்டர்? எவ்வளவு நேரம் ஆகும்? எவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியும்? நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா? வழியில் பஞ்சர் ஆகி விட்டால் என்ன செய்வது? வழியில் போலீஸ் எதிர்த்தால் என்ன செய்வது என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன்.
அவரின் சிந்தனை அனைத்தும் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதுதான் . இருப்பதால் கட்டிய வேட்டியுடன் தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்து அறிவழகன் மாயவரம், சீர்காழி , சிதம்பரம், என 130 கிலோ மீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து விடியற்காலையில் புதுச்சேரி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், ஜிப்சர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்ததை அறிந்த மருத்துவர்கள் அதிர்ந்தனர், உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சையையும் கொடுத்துள்ளனர். இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்து மருத்துவர்கள் அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் என அனைத்தையும் தந்து உதவியுள்ளார். இரண்டு நாள் கழித்து சைக்கிளையும், அந்த இவரையும் தங்கள் ஆம்புலன்ஸ் மூலமாக கும்பகோணம் அனுப்பி வைத்துள்ளனர் மருத்துவமனை மருத்துவர்கள்.
ஜிப்சர் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அனைத்தும் முடிந்ததும் எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என மருத்துவர்கள்் முதியவரிடம் கேட்க்கும் போது. என் பொண்டாட்டி தான் எனக்கு எல்லாமே, அவள் இல்லை என்றால் நான் இல்லை,, என்று கூறி நெகிழ வைத்துள்ளார் முதியவர் அறிவழகன்.
இதை குறித்து மருத்துவர்களிடம் பேசியபோது ஊரடங்கால் பேருந்துகள் இல்லை அதனால் இந்த முதியவர் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மனைவியை 130 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்ததாகவும், அதனால் உடனே அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்தோம், குறிப்பிட்ட தூரம் வரை தான் எங்களால் ஆம்புலன்ஸ் சேவையை அளிக்க முடியும், ஆனால் அவர்களின் ஏழ்மை நிலையை எண்ணி அவர்கள் வீடு வரை ஆம்புலன்சை அனுப்பி வைத்தோம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்…..
V. NandhiniPrakash















