fbpx
Others

வாலாஜா நகரில் மார்ச் 24 ஆம் தேதி உலக காச நோய் தினம்…

ஒவ்வொரு வருடமும் மார்ச் 24 ஆம் தேதி உலக காச நோய் தினமாக கருதப்படுகிறது.இதன் குறிக்கோள் அனைவருக்கும் காசநோய் பற்றி அறிந்து பாதுகாப்பான வாழ்வை வாழ்வதும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.அதனை முன்னிட்டு வாலாஜா நகரில் அமைந்துள்ள ஜீவன் லைப் கேர் மருத்துவமனை இயக்குனர் மற்றும் மருத்துவர் D. அச்சுதன் அவர்கள் தலைமையிலான மருத்துவக்குழு வாலாஜா நகரில் மட்டும் இல்லாமல் பல இடங்களில விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணிகள் நடத்திவருகின்றனர் . அதனை தொடர்ந்து ஜீவன் லைப் கேர் மருத்துவக்குழு மற்றும் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் நர்சிங் கல்லூரி & நர்சிங் பள்ளி மாணவிகளுடன் காசநோய் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஆற்காடு காவல் துறை பாதுகாப்புடன் ஆற்காடு பேருந்து நிலையதிலிருந்து நடைபயணம் நடத்த திட்டமிட்டனர். இதனை நகர மன்ற தலைவர் திருமதி.p. தேவி பென்ஸ் பாண்டியன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. மற்றும் இதில் சிறப்பு விருந்தினர்களாகதிமுக நகர செயளாலர் திரு.A.V.சரவணண் அவர்கள் , நகர மன்ற துணை தலைவர் திருமதி Dr.பவள கொடி சரவணண் அவர்களும்,திமுக மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் P.N.S சரவணன், மற்றும் விஐடி இணைப் பேராசிரியர் Dr.A.மோகன பிரியா மற்றும் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் நர்சிங் கல்லூரி & நர்சிங் பள்ளி தாளாளர் Dr. பாலாஜி லோகநாதன், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் நர்சிங் கல்லூரி முதல்வர் c. S. சிவசக்தி ஆகியோர்கள் பங்க்கேற்றார்கள். இதில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.காசநோய் (டிபி) எதனால் ஏற்படுகிறது?எலும்புருக்கி நோய் அல்லது காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும்.மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் எனப்படும் பாக்டீரியாவால் (கிருமிகள்) காசநோய் ஏற்படுகிறது.கிருமிகள்காற்றின்மூலம்ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. தொண்டை அல்லது நுரையீரலில் காசநோய் உள்ளவர்கள் இருமல், தும்மல், பேசும்போது அல்லது பாடும்போது கிருமிகள் காற்றில் பரவுகின்றன.
1. டிபி நோயின் பரவுதல்:டிபி கிருமிகள் ஒருவரிடமிருந்துஇன்னொருவருக்கு காற்றின் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது காசநோய் கிருமிகள் காற்றில் சேரலாம்.   2. டிபி நோயால் பாதிக்கும் உறுப்புகள்:டிபி முக்கியமாக நுரையீரலைத் தாக்கும், ஆனால் இது எலும்புகள், மூட்டுகள், நிணநீர் மண்டலம் மற்றும் மத்திய நரம்பு மண்டலம் போன்ற பிற பகுதிகளுக்கும் பரவுகிறது.
3. டிபி நோயின் அறிகுறிகள்:டிபி நோயின்தொடர்ச்சியான இருமல், சளி அல்லது ரத்தத்துடன் கூடிய இருமல், காய்ச்சல், உடல் எடை குறைதல் போன்றவை இருக்கலாம்.
4. டிபி நோயின் தடுப்பு:டிபி நோயைத் தடுப்பதற்காக BCG தடுப்பூசி உள்ளது.
5. டிபி நோயின் சிகிச்சை:டிபிக்கு சிறப்பு டாட்ஸ் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காசநோய் வராம்மல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?     சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கவும்,சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கவும், சரியான அளவு திரவங்களை உட்கொள்ளவும், சரியான அளவு உடற்பயிற்சி,புகை பிடிக்காமல், மது அருந்தாமல் மற்றும் போதை பொருட்கள் உட்க்கொள்ளாமல்,பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்து, பொது இடங்களில் தும்புவதும், முக கவசம் அணிந்து மற்றும் மருத்துவரின் ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றவும்.இதனை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு சலுகையுடனும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி இரத்த பரிசோதனை மற்றும் நுரையீரல் செயல் திரன் பரிசோதனை வாலாஜா ஜீவன் லைஃப் கேர் மருத்துவமனையில் வழங்குவதாக மருத்துவர் Dr.D.அச்சுதன் அவர்கள் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close