Others
சென்னை விமானத்தில் பயணி உயிரிழப்பு!

சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்பவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. விமான ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், அவசரமாக தரையிறக்கப்பட்டது. கமல் பாஷாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனால், பாஷாவின் உறவினர்கள் கண்ணீர் வடித்தனர்.