கொரோனா வைரசால் ஆரம்பித்த சீனாவின் ஆட்டம் ஆரம்பம் !!

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உருவானது சீனாவில் தான் அதனால் அங்கு பல உயிர்கள் பலியாயினர். இப்போது சீனாவின் வளர்ச்சி எப்படி இருக்கும்? உலகிலேயே கொரோனா வைரசால் முதல் முதலில் பாதிக்கப்பட்டது சீனாதான்.
கொரோன வைரஸிற்கு பிறகு சீனா கிட்டத்தட்ட 60 % தொழிற்ச்சாலைகளை திறந்து விட்டது. இதனால் சீனாவிற்கு ஏற்படப்போகும் நல்லது என்ன? இதே ஒரு நிலைமையில் தான் முதலாம் உலக போரின் போது அமெரிக்காவும் இருந்தது. அதன் பிறகுதான் அமெரிக்க வல்லரசாக மாறியது. அந்த ஒரு நிலைமைக்கு சீனா வருவதக்கன வாய்ப்புகள் இருக்கிறதா. டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தால் இன்று இந்தியா முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையில் இருக்கிறதே அதன் உண்மை தன்மை என்ன ?
உலகமயமாக்குதல் யார் வேண்டும் என்றாலும் எந்த நாட்டுக்கு வேண்டும் என்றாலும் முதலீடு பண்ணலாம் விற்பனை செய்யலாம் ஏற்றுமதி செய்யலாம் இறக்குமதி செய்யலாம் எதை தான் உலகமயமாக்குதல் என்று சொல்லுவார்கள்.
1970-களில் தன்னிறைவு பெற்ற பொருளாதாரம் தான் நடைமுறையில் இருந்தது. இந்தியாவிலும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரம் தான் இருந்தது. அதன் பிறகு இந்தியாவும் இந்த உலகமயமாக்குதலை பின்பற்றியது.
உலகமயமாக்குதலுக்கும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் அந்நியநேரடி முதலீடு. இந்த வார்த்தைதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது பொருளாதார மந்த நிலை வரப்போகின்றது.
சீனா நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த அனைத்திற்கும் ஒன்று தான் காரணம் அடுத்த வல்லரசு நாடு எது என்பது தான்.

அந்நியநேரடி முதலீடு என்று கூறும் போது 2001-ல் தான் சீனா தன்னை உலகமயமாக்குதலில் தன்னை இனைத்து கொண்டது. அதுவரை சீனாவால் எந்த நாட்டிற்கும் ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ செய்ய பல பிரச்சினைகள் இருந்தது , எல்லையென்றால் பல நாடுகள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய வெறும்பாதவர்களாக இருந்தார்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒழிக்கத்தான் 2001-ல் world trade-ல் தன் நாட்டை இணைத்து கொண்டார்கள். அதன் பிறகுதான் சீனாவின் வளர்ச்சி 30 மடங்காகா அதிகரிக்கிறது.

எல்லா நாடுகளுக்கும் அவர்களின் கிளைகள் , அவர்களின் வியாபாரங்கள் பெருகியது. ஆனால் மற்ற சில நிறுவனங்கள் சீனாவில் தங்களின் நிறுவனங்களை தொடங்குவதற்கு வேறு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் அதனால் சீனாவின் உள்நாட்து பொருளாதாரம் அல்லது அவர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது. இப்படி சீனாவில் எல்லாமே அதிகரித்ததால் சீனாவை மற்ற நாடுகள் assemble plant of the world
என்று அழைத்தார்கள். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அது சீனாவில் assemble ஆகிவிடும் என்பதால் சீனாவில் கொஞ்சமாவது ஆர்டர் கொடுக்கலாம் என்று பல நாடுகள் நினைத்தார்கள் அதனால் அங்கு பல நாடுகளின் வர்த்தகமும் நடந்தது. அதனால் எல்லா உலக நாடுகளும் சீனாவை நம்பித்தான் இருந்தது இந்த போக்கானது 2017-ம் ஆண்டுக்கு பிறகு பார்த்தால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் உரசலோடு உரசலாக இருந்தது உன் அதாவது சீனாவின் trade டிப்சிட் இவ்வளவாக இருக்கிறது அதனால் என்னால் உன்னுடன் வர்த்தகம் செய்ய முடியாது அதனால் உன் நாட்டிற்கு நான் பொருளாதார தடையை விதிக்கிறேன் அப்படி என்று அமெரிக்க சொன்னது.

சீன அதிபர் இந்தியாவிற்கு வருகிறார் இந்திய அதிபரும் உன் trade டிப்சிட் கூடுதலாக இருக்கிறது அதனால் எனக்கு கூடுதலாக இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரத்தை தர வேண்டும் என்று கேட்கப்பட்டது. இவ்வாறு சீனாவின் ஏற்றுமதி அதிகமானதாகவும் இறக்குமதி குறைவாகவும் இருக்கிறது.
சீனாவில் இறக்குமதி குறைவாக உள்ளது என்ற வார்த்தைக்கு பின்னல் சீனாவில் அணைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பு இருக்கிறது. வெளியில் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது உணவு பண்டங்கள் சீனாவுக்கு அதிக அளவு தேவைப்படாததால் தான் சீனாவை எதிர்க்கும் எண்ணம் மற்ற நாடுகளுக்கு வந்தது. குறிப்பாக அமெரிக்காவிற்கு வந்தது. அமெரிக்கா சொல்வது போல் நான் சீனாவிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யமாட்டேன் அதற்கு பதிலாக நான் என் நாட்டிலேயே தயாரிக்கப்போகிறேன் என்றெல்லாம் deglobalisation என்ற வார்த்தைக்கு நிகராக பார்க்கப்படுகிறது.
இனி deglobalisation என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கப்போகிறோம். எல்லா நாடுகளும் இந்த deglobalisation-க்கு தகுந்தமாதிரி தங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதில் மட்டும் குறிப்பாக வேலை பார்த்து கொண்டு உள்ளன.
இந்த கொரோனா வைரஸ் காரணமாக சீனா எடுக்கக்கூடிய பலவிதமான நடவடிக்கைகளும் இந்த deglobalisation இல் முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. உலகமயமாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் தற்சார்புக்கு திரும்ப வேண்டும் என பல நாடுகள் திரும்புவதற்க்கான வாய்ப்புகள் உண்டு. made in india திட்டமாக இருந்தாலும் சரி, விவசாயிகளுக்கு இனி இவர்கள் எத்தகைய திட்டத்தை பூர்த்தி செய்வார்கள் என்றெல்லாம் இருக்கட்டும் இந்தியாவும் இனி தன்னிறைவு பொருளாதாரத்திற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று பல வல்லுநர்களால் சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொழுது இருக்கும் அரசாங்கமும் சரி கார்பெரேட்டும் இதற்கு உறுதுணையாக இருப்பார்களா என்று கேட்டால் நடக்காது அவர்கள் globalisation-னைத் தான் விரும்புவார்கள்.
தற்போது பார்க்கும் போது சீனா ICU-வில் படுத்திருக்கும் போது மற்ற உலக நாடுகள் பலவிதமான இயக்கங்களில் இயங்கிக்கொண்டு இருந்தது இப்பொழுது அந்த சீன் அப்படியே மாரி இன்று உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசால் பாதித்து ICU-வில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுத்திருக்கும் நிலையில் சீனா மட்டும் எழுந்து தன் நாட்டின் தொழிற்ச்சாலைகளை இயக்க தொடங்கியுள்ளது.
அதுவும் கடந்த வாரம் மட்டும் தன் புதிய தொழிற்ச்சாலைகளை தொடங்கியுள்ளது. எதற்காக என்று கேட்டால் மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்காக இன்றைய தேதியில் மருத்துவ உபகரணங்கள் தான் எல்லா நாடுகளுக்கும் தேவைப்படுகின்றது . அமெரிக்க, இத்தாலி, ஸ்பெயின் , இந்தியா போன்ற எல்லா நாடுகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது மாஸ் முதற்கொண்டு பற்றாக்குறையாக உள்ளது.
ஆனால் சீனாவின் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது ஒரே நாளில் 16 கோடி மாஸ் தயாரிக்கப்படுகிறது அவர்கள் கூறுகிறார்கள் மாஸ் தயாரிப்பதும் பணத்தை அச்சிடுவதும் ஒரே மாதிரியாக உள்ளது என்று கூறுகிறார்கள் அந்த அளவிற்கு அவர்களுக்கு பணம் கொழிப்பதாக கூறுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதால் அதிக அளவில் அவர்களிடம் டாலர்கள் உள்ளது. இவ்வாறு அவர்களிடம் கூடுதலாக டாலர்கள் இருப்பதால் ஒருகட்டத்தில் அமெரிக்காவுக்கே அவர்கள் கடனை கொடுத்தார்கள். முன்னர் அமெரிக்காவிற்கு அதிக அளவில் கடன் கொடுத்தது ஜப்பானாக இருந்தது இப்போதுள்ள நிலவரப்படி அமெரிக்காவிற்கு அதிக அளவில் கடன் கொடுத்த லிஸ்டில் முதலில் சீனாதான் உள்ளது. அதற்காக அவர்கள் சில பாண்ட்களை வங்கியுள்ளார்கள்.
முன்னர் சீனாவில் தயாரித்த பொருட்களா அவை தரமானதாக இருக்காது போலியாணத்தைத்தான் அவர்கள் தருவார்கள் என்று பல நாடுகள் முத்திரை பதித்திருந்தனர். பின்னர் 10 ஆண்டுகளாக போராடி அதை மாற்றி சீனாவில் தயாரித்த பொருட்களா நன்றாகத்தான் இருக்கும் என்ற நிலையை கொண்டுவந்திருக்கிறார்கள்.

இந்த கொரோனா வைரஸிற்கு பிறகு சீனாவை நாங்கள் அப்புறப்படுத்துகிறோம் என்று சொல்லும் போது சீன தன் அடுத்த விளையாட்டை ஆரம்பிக்கிறது. அதுதான் முதலாம் உலக போரின் போது அமெரிக்கா விளையாடிய விளையாட்டு எந்த பொருள் கிடைத்தாலும் சரி அதை ஏற்றுமதி செய் , எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி அதை உடனே தொடங்குவதற்கான அனுமதி கொடு. எவ்வளவு பணம் தேவை வைத்துக்கொள் அந்த பொருளை தயாரித்துவிடு அந்த பொருளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்.சீன இல்லை என்றல் பல நாடுகளின் நிலைமை தலைகீழாக போகிவிடும் என்ற விதியை எழுது அந்த ஒரு விதியை தான் முதலாம் உலக போருக்கு பிறகு அமெரிக்கர்கள் எழுதினார்கள். அந்த ஒரு டெக்னீக்கைதான் இன்று சீனா எடுத்திருக்கிறார்கள். எந்த ஒரு ஒரு பொருள் கிடைத்தாலும் சரி அந்த பொருளை பெருமளவில் ஏற்றுமதி செய்வதில் தான் இன்று சீனா இறங்கியுள்ளது. அதை தன அவர்கள் சாய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இனி வரப்போகும் நாட்களில் வென்டிலேட்டராக இருந்தாலும் சரி, மாஸ் , மருத்துவ உபகரணங்கள் என பல பொருட்களை சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும்.இன்று பல உலக நாடுகள் லாக் டவுன் ஆகியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது அங்கு எல்லா பொருட்களுக்கும் அதாவது உணவு பொருட்கள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை தட்டுப்பாடாக உள்ளது. இந்த பொருட்களையும் சீனா தயாரிக்க விரும்பும் அத்தனை பொருட்களையும் சீனா ஏற்றுமதி செய்ய நினைக்கும்.
அப்போது தான் எல்லா நாடுகளும் நாங்கள் உங்கள் நாட்டின் பொருட்களை வாங்கிக்கொள்கிறோம் எங்களுக்கு முதலில் தா என்று கேட்பார்கள் அப்போது தான் சீனா டெப்டு ட்ராப் என்ற விளையாட்டை விளையாடுவார்கள். அதாவது நீ இப்பொழுது பணம் தர வேண்டாம் உங்கள் நாட்டில் தான் கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதே என்று சொல்லி கடனுக்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்வார்கள்.
அப்போதுதான் உலக வங்கியிடம் கடன் வாங்குவதை விட சீனாவிடம் பொருட்களை கடனுக்கு வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றும். அதனால் சீனாவின் வர்த்தகம் அதிகரிக்கும் சீனாவின் பங்குசந்தையும் அதிகரிக்கும்.
பங்குசந்தையில் சீனாவின் கை ஓங்கும் அடுத்து எல்லா விதமான பொருட்களும் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்ற நிலைமை ஏற்படும்.அதற்கு தகுந்தாப்போலவே உலக வங்கி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில் இந்தியாவும் சீனாவும் மட்டும் தான் கொஞ்சம் மீளுவார்கள் மீதம் உள்ள அணைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் சில நாட்களுக்கு முன்னேற் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில் இறப்பார்கள் வரும் சில வாரங்கள் மிக கொடூரமானதாக இருக்கும் என்று கூறியுருக்கிறார்.
இந்தியாவில் டெல்லியில் நடந்த ஒரே ஒரு விஷயத்தால் இன்று இந்தியாவின் பல கிராமங்கள் பூட்டப்பட்டு உள்ளது. இதற்கு ஒரே ஒரு நபர்தான் கரணம் அவர் டெல்லிக்கு சென்றுவந்தவர் கிடையாது. அவர் இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர் 68 வயதான அவருக்கு இருமலும் சளியும் இருந்துள்ளது அப்படிப்பட்ட அந்த நபரை பார்த்து போலீசார் வீட்டில் இருக்கும் படியும் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளனர் அந்த நபர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 6 நாட்கள் தனிமையில் இருந்துள்ளார் ஆனால் 6 நாட்களுக்கு பிறகு பல விழாக்களிலும் , பல குடும்ப விழாக்களிலும் கலந்து கொண்டார் இவ்வாறு 40,000 நபர்கள் அந்த ஒரு நபரால் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற பயத்தில் உள்ளனர். இதனால்தான் 22 கிராமங்களும் மூடப்பட்டு உள்ளன.
இந்த ஒரு நிலை தான் தப்லிக் ஜமாத் என்ற விஷயத்திலும் கவனிக்க பாடப்பட வேண்டியது. sorry மலேசியா sorry பாகிஸ்தான் என்ற காணொளியில் sorry இந்தியாவும் இருந்திருக்க வேண்டும் இதற்கு முழுக்க முழுக்க இந்திய அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் இப்போது இது இந்திய மக்களுக்கு ஆபத்தாக இருக்கிறது.
தமிழகத்தில் இந்த தப்லிக் ஜமாத்திலிருந்து கிட்டத்தட்ட 1500 பேர் வந்திருக்கலாம் என்றும் அதில் 900 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மீதம் உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்படாததால் அவர்களே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசால் கேட்டுக்கொள்ள பட்டுள்ளது. உங்களால் உங்கள் குடும்பத்திற்கோ அல்லது நண்பர்களுக்கோ எந்த ஒரு கஷ்டமும் வந்துவிட கூடாது என்று கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
ஒரு நபரால் 40 ஆயிரம் நபர்கள் , 22 கிராமங்கள் புட்டப்பட்டுள்ளதும் நம் இந்தியாவில் தான் . கிட்டத்தட்ட 600 யிலிருந்து 1500 நபர்கள் வரை எங்கே போனார்கள் எந்த மாதிரியான போக்குவரத்தில் போனார்கள், எத்தனை நபர்களுக்கு இந்த வைரஸ் பரவி இருக்கும் என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. எதையெல்லாம் பார்க்கும் போது வரும் வாரங்களில்தான் தெரியும். இதே நிலைமையில் தான் இத்தாலியும் இருந்தது அந்த நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது என்று நம்மால் பிரார்த்தனை மட்டும் தான் செய்யமுடியும். நடக்கப்பபோகும் சில விஷயங்களை யாராலும் தடுக்க முடியாது காரணம் அலட்சியத்தால் நாம் அதை அங்கீகரித்துவிட்டோம்.
சீனாவின் அடுத்த ஆட்டத்தையும் , இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் பற்றியும் வரும் சில நாட்களில் நாம் பார்க்கலாம்.















