fbpx
Others

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு…

இந்தியாவின் சில உயர் நீதிமன்றங்கள் அவ்வப்போது சில சர்ச்சை தீர்ப்புகளை வழங்குவது உண்டு. அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து பின்னர் அந்த தீர்ப்புகளை நிறுத்திவைப்பதும் உண்டு. அந்த வகையில் தற்போது சத்தீஸ்கர் நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையாமல், விந்து வெளியேறுவது, பாலியல் வன்கொடுமை ஆகாது; அது ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’ மட்டுமே என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு தம்தரி மாவட்டத்தில் நடந்த ஒரு வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த போதுஇந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மருத்துவ சான்றுகள்உயிர்பிழைத்தபெண்ணின்கன்னித்திரைசேதமடையாமல்இருப்பதாககூறியதைத்தொடர்ந்தும்,பெண்ணின்வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததாலும், உள்நுழைவு நடந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.மேலும் இதன்அடிப்படையில்,குற்றம்சாட்டப்பட்டவருக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனையை, ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’ என்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 375-ன்படி ஒரு செயலை பாலியல் வன்கொடுமை என்று உறுதி செய்ய உள்நுழைவு நடந்திருந்தால்மட்டுமே,மிகச்சிறியஅளவிலானஉள்நுழைவுஇருந்தாலும்அதுவன்கொடுமையாகக் கருதப்படும், ஆனால் உள்நுழைவு இல்லாத நிலையில் அதை வன்கொடுமை எனக் கூற முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close