fbpx
RETamil Newsஉலகம்

சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்: இயல்பு நிலைக்கு திரும்பியது சீனா

China has returned to normalcy by invading tourist destinations

 

கொரோனா தாக்கம் முதலில் அதிகம் காணப்பட்ட நாடான சீனா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கத்தை அறிவித்து அதனை கடைபிடித்து வருகின்றன. தொடக்கத்தில் சீனாவை உலுக்கிய கொரோனா தொற்றை அந்த நாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்திய சீனா தற்பொழுது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

முன்பு பல விதமான கட்டுப்பாடுகளை விதித்த சீனா தற்பொழுது அதனை தளர்த்தியுள்ளது. அதனை குறிக்கும் விதமாக 70 சதவீத சுற்றுலா தளங்களை திறந்துள்ளது. சுற்றுலா தளங்களளுக்கு  மக்கள் கூட்டம் வரத்தொடங்கியுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீன மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை உணர்த்தும் விதமாக குடும்பம் குடும்பமாக சுற்றுலா தளங்களில் குவிந்துள்ளனர்.

சர்வதேச உழைப்பாளர் தினத்தையொட்டி ஐந்து நாட்களுக்கு சீனாவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடலின் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே மக்கள் சுற்றுலா தளங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே சுற்றுலா தளங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close