fbpx
RETechnology

4 வருட இடைவெளிக்குப்பிறகு வெளியான iPhone SE!!

iphone SE Review

ஆப்பிள் நிறுவனம் புதிய சிறிய மற்றும் குறைந்த விலையில் ஐபோன் எஸ்இ மாடல் மொபைல்களை நான்கு வருட இடைவெளிக்குப்பிறகு அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ மொபைல் ஐபோன் 8 போலவே உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதில் உள்ள வசதிகள் அனைத்தும் ஐபோன்11 ல் உள்ளது போலவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ மொபைல் தான் ஆப்பிள் அறிமுகப்படுத்தியதிலே சிறிய மாடல்.

அதன் டிஸ்பிலே 4.7 இன்ச். ஏப்ரல் 24ம் தேதி முதல் இந்த வகை மொபைல்கள் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு , வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில்  இந்த மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2016ல் வெளியிடபட்ட ஐபோன் எஸ்இ மாடலின் புதிய வடிவம் ஆகும் இது.

புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சங்கள்  வருமாறு;

A13 பயோனிக் சிப்செட்

64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்

4.7′ இன்ச் கொண்ட (326 ppi இல் 1334×750) டிஸ்பிளே, 625 நைட்ஸ் பிரைட்னெஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட், ட்ரு டோன்

12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா

ட்ரு டோன் பிளாஷ்

4K ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR

IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு

7 மெகா பிக்சல் கொண்ட (f / 2.2) முன்பக்க செல்ஃபி கேமரா

டச் ஐடி பட்டன்

4ஜி வோல்ட்இ

வைஃபை 802.11ax

வைஃபை கால்லிங்

NFC

புளூடூத் v5.0

Qi வயலெஸ் சார்ஜிங்

ஜிபிஎஸ் / ஏ – ஜிபிஎஸ்

லைட்டின்ங் போர்ட்

3.5 mm ஹெட்போன் ஜாக் கிடையாது

Qi வயலெஸ் சார்ஜிங்

138.4 x 67.3 x 7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடை கொண்டுள்ளது.

1820 mah பேட்டரி மற்றும் 3gb ரேம் கொண்டுள்ளது.

ஐபோன் SE (2020) விலை விவரம்;

  • ஐபோன் எஸ்இ (2020) 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய மதிப்பில் ரூ.30,600 ஆகும்.
  • ஐபோன் எஸ்இ (2020) 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய மதிப்பில் ரூ.38,200 ஆகும்.
  • ஐபோன் எஸ்இ (2020) 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் இந்திய மதிப்பில் ரூ.45,000 ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close