fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்கள்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி..!

100 ventilators for india says trump

வாஷிங்டன்:

இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு தொலைபேசி வழியே அழைப்பு விடுத்தார். அப்போது நடைபெற்ற உரையாடல் உலக அரசியல் வரலாற்றில் முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாகிய இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்று டிரம்ப் உறுதி அளித்து உள்ளார்.

அந்த வாக்குறுதியின் அடிப்படையில் நன்கொடையாக 100 வெண்டிலேட்டர்கள் அடுத்த வாரம் கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close