விஜய்யின் அரசியல் எதிர்காலம் என்ன…..?
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வரும் வேளையில், த.வெ.க (TVK) தரப்பு வெளியிட்ட ஒரு வீடியோ, இப்போது அவர்களுக்கே வினையாக மாறியுள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜின் ஆதரவைப் பெற ‘குதிரை பேரம்’ (Horse Trading) நடந்ததற்கான நேரடி சாட்சியமாக இந்த வீடியோ உருவெடுத்துள்ளது, அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது எம்.எல்.ஏ கடத்தப்பட்டார் என்றும், போலி கடிதம் மூலம் விஜய் ஆட்சியமைக்க முயல்கிறார் என்றும் நள்ளிரவில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், காமராஜ் எம்.எல்.ஏ தங்களைத்தான் ஆதரிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தவும் த.வெ.க தரப்பு ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது.அந்த வீடியோவில், எம்.எல்.ஏ காமராஜ் ஒரு காருக்குள் அமர்ந்து கொண்டு, டிடிவி தினகரனின் அனுமதி பெற்றே தான் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாகக் காட்டும் வகையில்ஒருகடிதத்தில்கையெழுத்திடுகிறார்
. “காமராஜ் மகிழ்ச்சியுடனும், விருப்பத்துடனும் தான் ஆதரவு கடிதம் தந்தார்” என்பதற்கு இதுவே சாட்சி என த.வெ.க தரப்பு வாதிட்டது. விஜய்க்கு எதிராகத் திரும்பும் ‘ஆதாரம்’ ஆனால், த.வெ.க தரப்பு வெளியிட்ட அந்த வீடியோவே இப்போது அவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. சட்ட வல்லுநர்கள் மற்றும்அரசியல்விமர்சகர்கள்இந்தவீடியோவைச்சுட்டிக்காட்டி சிலஅடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர்: கார் பயணம் ஏன்?: ஒரு எம்.எல்.ஏ தனது ஆதரவுக் கடிதத்தை முறைப்படி கட்சி அலுவலகத்திலோ அல்லது வெளிப்படையான இடத்திலோ வழங்காமல், ஒரு காருக்குள் வைத்து அவசர அவசரமாக எழுத வேண்டிய அவசியம் என்ன? இது அவர் ஒருவித அழுத்தத்தில் இருந்ததையே காட்டுகிறது என்று தினகரன் தரப்பு வாதாடுகிறது.குதிரை பேரம் புகார்: நள்ளிரவில் காருக்குள் வைத்து ஒரு எம்.எல்.ஏ-விடம் ஆதரவு பெறுவது ஜனநாயக முறைப்படி ‘குதிரை பேரம்’ மற்றும் ‘ஆள் கடத்தல்’ என்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பொய் வாக்குமூலம்: வீடியோவில் காமராஜ் ‘தினகரனின் அனுமதி பெற்று’ கையெழுத்திடுவதாகக் கூறுகிறார். ஆனால், தினகரனோ ஆளுநர் மாளிகை வாசலில் நின்றுகொண்டு அதை மறுக்கிறார். இது எம்.எல்.ஏ-வை மிரட்டி வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இது கட்டாயப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ என நிரூபணமானால், த.வெ.க நிர்வாகிகள் மீது கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்குகள் பாயும். முக்கியமாக, மக்கள் மத்தியில் “தூய அரசியல்” பேசும் விஜய் மீது ‘குதிரை பேரம்’ என்ற கறை படிவது, அவரது கட்சியின் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆளுநர் ஆர். அர்லேகர் இந்த வீடியோவை ஒரு ‘சந்தேகத்திற்குரிய ஆதாரமாகவே’ கருதுவதால், விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம். அரசியல் சதுரங்கத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்ள விஜய் தரப்பு வீசிய ‘வீடியோ’ அஸ்திரம், இப்போது அவர்களது பக்கமே திரும்பித் தாக்கத் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் இது வழக்காக உருவெடுத்தால், அது விஜய்க்கு மிகப்பெரிய சட்டப் போராட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழக அரசியலில் அடுத்த சில மணிநேரங்கள் மிகவும் பதற்றமானவையாக
இருக்கப்போகின்றன. எம்எல்ஏ பேச்சு நேற்று இரவு மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் டிடிவி தினகரன் ஆளுநரிடம் அதிரடி புகார் அளித்தார். இது குறித்து நள்ளிரவில் ஆளுநர் ஆர்.வி ஆர்லேகரை நேரில் சந்தித்து முறையிட்ட தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார். “எங்களிடம் இருப்பது ஒரே ஒரு எம்.எல்.ஏ தான். கட்சித் தாவல் தடைச் சட்டம் செல்லாது என்பதால், திட்டமிட்டே எங்கள் எம்.எல்.ஏ-வை குறிவைத்து அவர்கள் கடத்தியுள்ளனர். ஒரு போலி கடிதத்தை வைத்துக்கொண்டு ஆளுநர் எப்படி ஆட்சியமைக்க அழைக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கிடையில், ஆளுநர் மாளிகையிலிருந்து எம்.எல்.ஏ காமராஜுக்கு நேரடியாகத் தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. “நீங்கள் ஆதரவு கடிதம் கொடுத்தீர்களா?” என்ற கேள்விக்கு, “நான் அப்படி எந்தக் கடிதமும் தரவில்லை, நேரில் வருகிறேன்” என்று கூறிவிட்டு காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார். ஆளுநர் முன்னிலையில் ஆஜரான எம்.எல்.ஏ காமராஜ், “நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாரிதாஸ் ஆப்பு இந்த நிலையில் அரசியல் விமர்சகர் மாரிதாஸ் செய்துள்ள போஸ்டில், எவ்வளவு பெரிய புத்திசாலியா இருந்தால் ரகசியமா ஒரு MLA வரவச்சு எழுதி வாங்கி அவரை ரகசியமா தங்க வச்சு.. அத இவனுகளே ரகசியமா வீடியோ எடுத்து வச்சு, இப்போ பாருங்க ரகசியமா எடுத்த ரகசிய சந்திப்புனு வெளியிடுவானுக. குழந்தை பிடிக்கிறவனுக்கு வேற என்ன தெரியும்! இவனுக வெளியிட்ட வீடியோ தான் மொத்த சாட்சியே குதிரை பேரம் AMMK கட்சி தலைமைக்கே தெரியாமல் அந்த MLA விடம் எழுதி வாங்கியதற்கு.இதுக்கே சட்டம் என்ன பண்ணும் தெரியுமா? நீதிமன்றம் இப்போ போங்க ! இந்த வீடியோ தான் மொத்த ஆப்பு.., என்று கடுமையாக கூறி உள்ளார்.
l