சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது வீண் வதந்தி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

மேட்டூர்;
சென்னையில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி வீண் வதந்தி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 70 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இதனால் சென்னையில் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சேலத்தில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்து பேசிய முதல்வர் “மீண்டும் ஊரடங்கு என்று வாட்ஸ் அப் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் வருவது தவறான செய்தி.
இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதே கொரோனாவை தடுப்பதற்கான மருந்து.
கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதை மக்கள் தவிர்ப்பது வேதனையளிக்கிறது.
நான் வரும்பொழுது வழியெங்கும் பார்க்கிறேன் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணிகளில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி பேசினார்.















