fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல…! உச்ச நீதிமன்றம்!

Apex court about OBC reservation

டெல்லி:

மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டி தொடரபட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரே காணத்திற்காக அனைத்து தமிழக கட்சிகளும் ஒன்றிணைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின் கீழ் வராது எனக்கூறி மனுவை திரும்ப பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இட ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close