

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை திடீரென இந்த ஆலையில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டது. காற்றில் பரவிய இந்த விஷவாயுவால் கிராமத்தில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சாலையில் நடந்து சென்றவர்கள் ஆங்காங்கே மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விஷவாயு தொழிற்சாலையை சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பாதிப்பினால் இதுவரையில் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கு அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் மத்திய மந்திரியும்,முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,” வாய்க்கசிவு குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்” என ட்விட்டரில் ஒரு பதிவினை பதிவித்திருந்தார்.
















