fbpx
Others

சிலம்ப வரலாற்றில் முதல் முறையாக சிலம்பப் பயிற்சிக்கு ஒரு பாசறை…

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் மறவர் காவலர்கள் போர்க்கலை நிலநிதி கலை இரவு!

மார்ச் 14ஆம் தேதி நடக்கிறது!!சிலம்ப வரலாற்றில் முதல் முறையாக சிலம்பப் பயிற்சிக்கு ஒரு பாசறை (குருகுலம்) உருவாக்கப்பட இருக்கிறது மலேசிய நாட்டில் மலாக்கா மாநிலத்தில் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.போர்க்கலை சிலம்பம் அமைப்பின் நிறுவனர். முரளிதரன்ஆசான் அவர்கள் ஆலோசனைப்படி மலாக்கா மாநில போர்க்கலை தலைவர். சுரேஷ்ஆசான் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.வருகிற மார்ச் மாதம் 14ஆம் தேதி சிலம்ப பயிற்சிக்கான பாசறை அமைப்பதற்கு நில நிதி திரட்டும் நிகழ்ச்சி மலாக்காவில் நடக்கிறது.மாபெரும் கலை விழாவாக நடத்தப்படும் நிகழ்ச்சியில் மலேசியாவின் திரைப்படம், தொலைக்காட்சி கலைஞர்கள், பல்துறை அதிகாரிகள், சிலம்ப ஆசான்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.மேலும் இந்தியாவிலிருந்து உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயலாளர்.கலைமுது மணி.ஆர். முருகக்கனி ஆசான் மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர். புகழ் இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலம்ப கலைஞர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க இருக்கிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close