fbpx
GeneralRETamil News

தனது குழந்தையோடு வந்து மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார் ஸ்ரீ ஜனா ஐ.ஏ.எஸ்

மகப்பேறு விடுப்பு வேண்டாம் என கூறி மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று உள்ளார் ஸ்ரீ ஜனா ஐஏஎஸ்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா அவரின் செயல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று விசாகப்பட்டினத்தில் தன் பணியை தொடங்கிய ஸ்ரீ ஜனா கடந்த ஒரு மாத காலமாக மகப்பேறு விடுப்பில் இருந்தார் இன்னும் ஐந்து மாத விடுப்பு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதால் விடுப்பு வேண்டாம் எனக்கூறி தனது குழந்தையோடு வந்து மீண்டும் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி விட்டது நான் நன்றாக தான் உள்ளேன், நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது என் மக்களுக்கும், மாநகராட்சிக்கும் எனது உதவி நிச்சயம் தேவைப்படும்,

இந்த நேரத்தில்  என்னுடைய உடல் நலம் கருதி சுயநலமாக என்னால் வீட்டில் இருக்க முடியாது.

என்னுடைய அலுவலகத்தில் எல்லோரும் ஓடி ஓடி இரவு பகலாக உழைக்கும் போது நான் மட்டும் என் குழந்தையை காரணம் காட்டி ஓய்வெடுக்க முடியவில்லை.

மனிதனுக்கு மனிதன் உதவும் கட்டாயத்தில் இருக்கிறோம், சேர்ந்து செயல்படுவோம் என்று கூறினார்..

ஸ்ரீ ஜனா அபின் இந்த செயல்பாடு பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இச்சூழ்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் தன்னுடைய சமூக வலைத்தளத்தில்..

அரசு ஆறு மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கியுள்ள நிலையில் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையருக்கு ஒரு மாதத்தில் மீண்டும் பணிக்கு சேர்ந்து ஆச்சரியத்தை அளித்துள்ளார்.

அவரது சேவை உணர்வில் நான் வியந்து போகிறேன். ஸ்ரீசேனா பாராட்டுக்குரியது.

ஒரு பெண் சாதாரணமானவள் அல்ல என்பதை ஸ்ரீ ஜனா நிரூபித்து விட்டார் என்றும் அறிவித்துள்ளார்.

?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close