fbpx
Others

அமித்ஷா ஜம்மு காஷ்மீர்க்கு திடீர் வருகை …

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென ஜம்மு காஷ்மீர் சென்று பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியது விவாதப் பொருளாகி இருக்கிறது.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமே 2 ஆக உடைக்கப்பட்டுஜம்முகாஷ்மீர்,லடாக்என2யூனியன்பிரதேசங்களாக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் மட்டும் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகஅறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்கு பின்னரே விடுதலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளாக ஜனாதிபதி ஆட்சிதான் அமலில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடர்பான வழக்கில் செப்டம்பர் மாதத்துக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம்Union Govt to hold Jammu Kashmir Assembly Election Why Amit Shah visits Srinagar உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால் லோக்சபா தேர்தலில் காஷ்மீரில் ஒரு தொகுதியில் கூட பாஜக போட்டியிடவில்லை. இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள காஷ்மீரில் மொத்தம் 3 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதே நேரத்தில் இந்துக்கள் அதிகமாக வாழும் ஜம்முவில் 2 தொகுதிகளில்வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது பாஜக. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென நேற்று ஸ்ரீநகர் சென்றார். ஸ்ரீநகரில் பகர்வால், பஹாரி, குஜ்ஜார் மற்றும் சீக்கியர் சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் அமித்ஷா. பஹாரி ஜாதியை எஸ்டி பட்டியலில் சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு குஜ்ஜார் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இந்த ஜாதிகளின் பிரதிநிதிகள் அனைவரும் அமித்ஷாவை சந்தித்து பேசினர். டிக்கெட் செக்கிங் மட்டுமில்லை.. ரயிலில் டிடிஆருக்கு இவ்ளோ பொறுப்பு இருக்கா.. எப்படி புகார் அளிப்பது? அமித்ஷாவின் திடீர் வருகை தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. காஷ்மீரில் வேட்பாளர்களையே நிறுத்தாத கட்சிதான் பாஜக. தற்போது அமித்ஷா திடீரென ஸ்ரீநகருக்கு ஏன் வருகை தந்துள்ளார்? என்கிற கேள்யை முன்வைக்கிறது தேசிய மாநாட்டுக் கட்சி. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. இதன் முன்னோட்டமாகவே ஸ்ரீநகருக்கு அமித்ஷா வருகை தந்துள்ளார்; இதனால்தான் அனைத்து ஜாதி தலைவர்களை அமித்ஷா சந்தித்து பேசினார் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

Related Articles

Back to top button
Close
Close