GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
இப்படித் தான் இந்தியாவில் கொரோனா குறைஞ்சது…! சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!
Testing corona rate decreases in India

டெல்லி:
கொரோனா உயிரிழப்பு குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனை, நோயாளிகளின் தொடர்புகள் கண்டுபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.
அதனால் தான், உலக நாடுகளை விட பலி எண்ணிக்கையில் இந்தியாவில் குறைவாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி, உலகெங்கும் பலியாவோர் எண்ணிக்கை, சராசரியாக, 6.04ஆக உள்ளது.
ஆனால், இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். குணம் அடைவோர் விகிதத்திலும் சிறப்பாக இந்தியா செயல்பட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















