fbpx
RETamil Newsஇந்தியா

ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்:ரேபிட் ஊழல் குறித்து ராகுல் காந்தி !!

புது தில்லி:

கொரோனா நோய் பாதிப்பைக் கண்டறிய உதவும் துரித சோதனைக் கருவி ரேபிட் கிட் ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருத்த அவமானம் என்று கொள்முதல் ஊழல் குறித்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி  ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். .

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பின் முதல் நிலையை கண்டறிய, ‘ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் துரித சோதனைக் கருவிகளை சீனாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்தது.

இந்த கருவிகள், ரூ.225-க்கு சீன நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, ரூ.600க்கு விற்கப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்த ரேபிட் கிட் ஊழல் என்பது  ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று வெளியாகியுள்ள இணையதள செய்தி ஒன்றின் அறிக்கையுடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது;

லட்சகணக்கான சகோதர சகோதரிகள் சொல்லிலடங்கா துன்பங்களை அனுபவித்து வரும் வேளையில்,

இந்த சூழ்நிலையிலும் ஒருவர் லாபமீட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது.

இந்த ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்.

இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பிரதமரை நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close