fbpx
RETamil Newsஇந்தியா

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை சோதனை வெற்றிபெற்றது – அரவிந்த் கெஜ்ரிவால்

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் கலம்இறங்கியுள்ளனர்.

தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தடுப்புக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களால் மட்டும் கொரோனாவை எதிர்த்து போராடும் திறனை பெற்றிருக்கின்றனர்.

அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு , அவற்றை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.

இந்த கொரோனா வைரஸை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது.டெல்லி, கேரளா, குஜராத், மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதன் மூலம் டில்லியில் 4 நோயாளிகள் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கல்லீரல் பைலரி சயின்ஸ் இன்டிடியூட் இயக்குனர் எஸ்.கே.ஸ்டாலின் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது;

கடந்த சில நாட்களில் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் 4 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது வரை அதன் முடிவுகள் நம்பிக்கைஅளிப்பதாக உள்ளது.

எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை நோயாளிகளில் குறிப்பிட்ட சிலருக்கு பிளாஸ்மா சோதனையை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த 2-3 நாட்களில் நாங்கள் அதிகமான சோதனைகளை நடத்துவோம்.பின்னர் அனைத்து தீவிர நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சியை அளிப்பதற்கு அடுத்த மாதம் அனுமதி பெறுவோம்.எனவே கொரோனாவில் இருந்து மீண்ட மக்கள் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் எஸ்.கே.ஸ்டாலின் பேசியதாவது;

‘பிளாஸ்மா சிகிச்சை 4 நோயாளிகளுக்கு நல்ல முடிவை தந்திருக்கிறது. எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் எங்களிடம் உள்ள மற்ற 2-3 நோயாளிகளுக்கு இரத்தம் மற்றும் பிளாஸ்மா தயாராக உள்ளது.இன்று அவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க உள்ளோம் ‘ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close