fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

வாழ்க்கையில் இனி வரக்கூடாது இது போன்ற விடுமுறை – சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகள்

கொரோனா என்ற ஒரு வைரசால் இன்று உலகமே பாதிக்கப்பட்டு கதிகலங்கியுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கை கேலி கிண்டல் செய்யும் வகையிலும் , அதன் அவசியத்தை வலியுறுத்தியும் நாளொன்றுக்கு மீம்ஸ் கிரியேட்டர்களின் எண்ணத்தில் உருவான தகவல்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதற்க்கு பலரும் தங்கள் ஆதரவையும் , எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஊரடங்கு விடுமுறை என்ற தலைப்பிலான பதிவு வைரலாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டும் அல்லாமல் வேகமாக அனைவருக்கும் பகிரப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த பதிவு வருமாறு;

உலகம் இதுவரை கண்டிராத விடுமுறை…

உலகளவில் இதுவே அதிகநாட்கள் விடப்பட்ட விடுமுறை….

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் விடுமுறை….

வீட்டுக்குள்ளேயே மகிழ்ச்சியை காணும் விடுமுறை….

வீட்டை வீட்டு வெளியில் வரமுடியாத விடுமுறை….

வாழ்க்கையை பல கோணங்களில் புரியவைக்கும் விடுமுறை….

வாழ்க்கையில் இப்படி இனி வரக்கூடாத விடுமுறை….

வாகனங்கள் இல்லாத விடுமுறை…

குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் இல்லாத விடுமுறை….

சுற்றுலா செல்ல முடியாத நீண்ட விடுமுறை….

அக்கம், பக்கத்தினர் வீடுகளுக்கு செல்ல முடியாத விடுமுறை…

திருவிழாக்கள் இல்லாத விடுமுறை,

மத வழிபாட்டுத்தலங்கள் செல்ல முடியாத விடுமுறை…

எது இல்லாமல் மனிதன் வாழ முடியும் என புரியவைத்த விடுமுறை…

செலவுகள் குறைவான விடுமுறை…

உலகமே ஆட்கள் நடமாட்டம் இன்றி வெரிச்சோடிய விடுமுறை..

இயற்கையை பாதுகாக்கும் விடுமுறை….

இருந்தாலும் பெண்களுக்கு இல்லை விடுமுறை…

ஏனென்றால் பசிக்கு இல்லை விடுமுறை….

இவ்வாறு அதில் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close