வால்பாறையில் கோலாகலமாக நடைபெற்ற தைப்பூச திருவிழா….
வால்பாறையில் கோலாகலமாக நடைபெற்ற தைப்பூச திருவிழா – பக்தர்கள் திரளான பங்கேற்பு
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 
(1/2/26) தைப்பூச திருவிழா மிகுந்த பக்தி உணர்வுடனும் கோலாகலத்துடனும் நடைபெற்றது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காலை முதலே முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பால் குடம், காவடி, வேல் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். குறிப்பாக, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அழகுகுத்தி விரதம் இருந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.“அரோகரா, அரோகரா” என்ற பக்தி முழக்கங்களால் வால்பாறை நகரமே ஆன்மிகக் களத்தில் திளைத்தது.திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. காவல்துறை, தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுக்கள் முன்னெச்சரிக்கையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.சுற்றுலா நகரமான வால்பாறைக்கு வெளியூர் பக்தர்களும் அதிக அளவில் வருகை தந்ததால், நகரின் முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின. இதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கும் நல்ல வர்த்தக வாய்ப்பு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.தைப்பூச திருவிழா அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக நடைபெற்றதாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.கோவை மாவட்ட புகை பட கலைஞர் ஜெயப்பிரகாஷ் தே 