fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

கணவரின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்து கதறிய மனைவி….! அவ்வளவு தாங்க உலகம்

Noida lady watched husband funeral in video call

நொய்டா:

கொரோனாவால் உயிரிழந்த கணவரின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்து மனைவி கண்ணீர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 60 வயது நபருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கணவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. சுவாசக்கோளாறு மற்றும் இதயப் பிரச்னையால் மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நபரின் மனைவியோ கொரோனா சிகிச்சையில் அவர் இறந்த அதே மருத்துவமனையில் இருக்கிறார். மகள் குஜராத்திலும், உறவினர்கள் வாரணாசியிலும் இருக்கின்றனர்.

ஊரடங்கு என்பதால் இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. இதனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பிலேயே உடலை தகனம் செய்தனர். இறுதி சடங்கில் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாத சூழல்.

தானும் சிகிச்சையில் இருப்பதால் தவியாய் தவித்த அவரது மனைவி, கணவரின் இறுதி சடங்கை வீடியோ கால் மூலமாக பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close