Others

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகி​றார்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்​லியில் இருந்து தனி விமானத்தில் புறப்​பட்டு, இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்னை வருகி​றார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 4-வது வழித்​தடத்தின் ஒரு பகுதியாக நிறைவடைந்​துள்ள பூந்தமல்லி- வடபழனி வரையிலான 14.64 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் முதல்வர் விஜய்யுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்​கி​றார்.இதைத்​தொடர்ந்து, போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலமாக சென்னை ஐஐடி வளாகத்​துக்கு செல்கி​றார். நண்பகல் 12:15 மணியள​வில், பிரதமர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்​டேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கி​றார். தொடர்ந்து, அங்கு புதிதாக அமைக்​கப்​பட்​டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கி​றார். மதியம் 1:30 மணியள​வில், ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்​களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டு​கி​றார். மேலும், நிறைவடைந்த திட்டங்​களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்​பணிக்​கி​றார்.சுமார் ரூ.4,900 கோடியில் அமைக்​கப்பட்ட பூந்தமல்லி- வடபழனி வழித்​டத்தைபிரதமர்திறந்துவைக்கி​றார். இதன்பிறகு, சுமார் ரூ.3,700 கோடி மதிப்​பிலான முக்கிய தேசிய நெடுஞ்​சாலைத் திட்டங்​களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்​களைத் தொடங்கி வைக்கி​றார்.மேலும் ரூ.750 கோடி மதிப்பில் ரயில்வே உள்கட்​டமைப்புத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்​பணிக்​கி​றார். தமிழகத்தில் கடல்சார் உள்கட்​டமைப்பை வலுப்​படுத்​த​வும், சரக்கு கையாளும் திறனை அதிகரிக்​கவும் சென்னை துறைமுகத்தில் நான்கு உள்கட்​டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைக்கி​றார்.பிரதமர், சென்னையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்​பரேஷன் நிறுவனத்தின் மணலி சுத்தி​கரிப்பு நிலையத்தில் குரூப் 3,4 லூப் ஆயில் பேஸ் ஸ்டாக்ஸ் திட்டத்​துக்கு அடிக்கல் நாட்டு​கி​றார். ஐஐடி நிகழ்​வுகளை முடித்துக் கொண்டு, நந்தம்​பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்​கி​றார். அங்கு விழா மலரை வெளியிட்டு உரையாற்​றுகி​றார். பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் போரூருக்குச் செல்கி​றார். அப்போது, விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரை ரோடுஷோ செல்கி​றார். மேலும் சைதாப்​பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து சென்னை அண்ணா பல்கலைக்​கழகம் வரை பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கி​றார்.பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கவும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வருகிறார்.இதன் ஒரு பகுதியாக, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி – வடபழனி வழித்தடம் அமைக்கப்பட்டு, ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். முன்னதாக, இத்தடத்தில் போரூர் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணிக்க உள்ளார். அப்போது, அவருடன் தமிழக முதல்வர் விஜய் பயணிக்க இருக்கிறார்.தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமருடன் இணைந்து பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசுப் பயணமாக கடந்த மே 27-ம் தேதி டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.அதன்பிறகு 2-வது முறையாக, முதல்வர் விஜய் ஜூன் 10-ல் டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு, தற்போது பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் விஜய் அரசு நிகழ்ச்சிக்காக மெட்ரோ ரயிலில் பயணிக்க உள்ளார்.பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளின்கீழ் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பிரதமர் வருகையையொட்டி மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம்ஆகிய5பகுதிகள்இன்றுசிவப்புமண்டலங்களாகஅறிவிக் கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழிப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close