fbpx
REஇந்தியா

ஜனாதிபதியின் சுதந்திர தின உரை – “சர்ச்சைக்குரிய விஷயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசை திருப்ப கூடாது”

72-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

ஜனாதிபதி ராஜ்நாத் கோவிந்த் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார் அதில் அவர் கூறியதாவது ;

 

சுதந்திர தினம் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கொண்டாடபடுகின்றது. அப்படி இருக்கும் போது இந்த வருடம் கொண்டாடப்படும் இந்த சுதந்திர தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் ஏன் என்றால் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்கம் ஆகும்.

அவர் ஒரு எளிமையான மனிதர் , கண்டம் விட்டு கண்டம் நினைவு கூறப்படும் மனிதராக திகழ்ந்தவர்.அவர் இந்தியாவின் அடையாளமாக இருந்தார். வன்முறையைவிட அகிம்சைக்கே பலம் அதிகம் என்று காட்டியவர். அவருடைய இத்தகைய கொள்கையை நம் அன்றாட பணியில் கடைபிடிக்க வேண்டும்.

நாடு இப்போது முக்கியமான தருணத்தில் உள்ளது. நீண்ட காலமாக காத்திருந்த இலக்குகளை அடைய வேண்டி உள்ளது. இந்த நிலையில் எத்தகைய சர்ச்சைக்குரிய விஷயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசை திருப்பி விட கூடாது.

பெண்கள் , தம் விருப்பிய வாழ்கை வாழும் உரிமை உள்ளவர்கள். அவர்கள் தங்களின் பணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்.

நாடு அடைந்து வரும் வளர்ச்சியும், மாற்றமும் பாராட்டிற்குரியது. இந்தியா , அரசங்கதிக்கு மட்டும் சொந்தமானதல்ல ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது. இவ்வாறு உரை ஆற்றினார்.

Related Articles

Back to top button
Close
Close