fbpx
Others

பழைய வால்பாறை CSI ஆலயத்தில் நடைபெற்ற வேதாகம விடுமுறை பள்ளி நிகழ்ச்சி….

10/5/26 கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பழைய வால்பாறை CSI ஆலயத்தில் நடைபெற்ற வேதாகம விடுமுறை பள்ளி நிகழ்ச்சி கடந்த பத்து நாட்களாக மிகுந்த சிறப்புடனும், தேவனுடைய பேரான கிருபையினாலும் தடையின்றி நடைபெற்று இன்று இனிதே பவனியுடன் துவங்கி நிறைவடைந்தது. இந்த வேதாகம விடுமுறை பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வேதாகம பாடங்கள், கிறிஸ்தவ ஒழுக்கங்கள், பாடல்கள் மற்றும் பல்வேறு திறன் வளர்ப்பு நிகழ்ச்சிகளில் பயிற்சி பெற்றனர்.இந்த பத்து நாட்களும் தேவன் அருளால் அனைத்து தேவைகளும் அற்புதமாக சந்திக்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். குழந்தைகளுக்கான உணவு, தேநீர், பாடப்புத்தகங்கள் மற்றும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் நிறைவு நாளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குழந்தைகள் பாடல்கள், வேதாகம நாடகங்கள், நடனங்கள், உரைகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும் வழங்கினர். அவர்களின் திறமைகளை கண்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அருகிலுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி, நிகழ்ச்சியை ஆசீர்வதித்தனர்.இந்நிகழ்ச்சி இன்று சிறப்பு உணவுடன் இனிதே நிறைவடைந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் அன்புடன் சிறப்புவிருந்துவழங்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.இந்த வேதாகம விடுமுறை பள்ளி மூலம் குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சியுடன் சேர்ந்து அவர்களின் திறமைகளும் வெளிப்பட்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி முடித்த ஆலய போதகர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். கோவை மாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ் தே

Related Articles

Back to top button
Close
Close