fbpx
REஉலகம்

பூமியை இன்று கடக்கவிற்கும் முகக்கவசத் தோற்றச் சிறுகோள்!

Asteroid resembling a face mask to fly past Earth today

நமது சூரிய குடும்பத்தில் கோள்களல்லாத என்னற்ற சிறுகோள்கள் நம் சூரியனை சுற்றி வருகின்றன. அவை அவ்வப்போது நம் பூமியின் சுற்றுப்பாதையிலும் குறுக்கிடும்.

அவ்வாறு வரும் பெரும்பாலான சிறுகோள்கள் அளவில் மிகச்சிறியவை. அதனால் பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. சில நேரங்களில் ஒரு கி.மீ. நீளத்திற்கும் மேற்பட்டவையாக இருந்தால் பூமிக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

அதனால் உலகளவில் விஞ்ஞானிகள் சிறுகோள்களின் சுற்றுவட்டப்பாதைகளை ஆராய்ந்து வருகிறார்கள். அவ்வாறு 1998 ஆம் ஆண்டு நாசாவால் கண்டறியப்பட்ட 52768 (1998 OR2) என்ற சிறுகோள் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.26 மணிக்கு பூமியை 62,90,589.34 கி.மீ. தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.

இந்த சிறுகோளானது சுமார் 1.93 கி.மீ. அகலமும், மணிக்கு 31,319.44 கி.மீ கடக்கும் வேகம் கொண்டது. இருந்தும் இந்த சிறுகோள் நிலவை விட 16 மடங்கு தூரத்தில் பூமியை கடப்பதால் இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் வராது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியவேண்டியுள்ள நிலையில் பூமியை கடந்து செல்லும் இந்த சிறுகோளும் முகக்கவச வடிவம் கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.

இந்த நிகழ்வை நேரலையில் இந்த இணையப்பக்கத்தில் அல்லது இந்த இணையப்பக்கத்தில் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close