fbpx
RETamil News

இந்தியாவில் கொரோனாவால் பதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : 62-ஆக உயர்வு

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் தற்போது அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் – 24-ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கிற்கு உத்தரவை பிறப்பித்தது. அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவும், மக்களின் ஒத்துழைப்பின் காரணமாகவும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்பட்டு உள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸால் பதித்தோரின் எண்ணிக்கை 2301-ல் இருந்து 2517-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56-ல் இருந்து 62-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாமுழுவதும் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும், கேரளா மூன்றாம் இடமும் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த வைரஸின் தாக்கம் குறையுமா இல்லையா என்பதை தெரிவிக்கப்படவில்லை.

Related Articles

Back to top button
Close
Close