fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு…! தமிழிசை மெசேஜ்

Telangana governor tamilisai wishes to CM edapaddi palanisamy

ஐதராபாத்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள். கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதால் மக்கள் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.

அதன் காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளும் விமரிசையாக கொண்டாடப்படவில்லை. அதற்கு மாற்றாக அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வழியாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தற்போதைய தெலுங்கானா ஆளுனருமான தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close