fbpx
Others

மகளிர் தினத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி…..?

சர்வதேச மகளிர் தினம் ; STEM துறைகளில் நிலவும் பாலின இடைவெளி - ஜே.வி.பி  நியூஸ்                                                                                                         தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு - என்ன காரணம்? - தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை 2026-ல் நாம் அனைவரும் சேர்ந்து மாற்றுவோம் என மகளிர் தினமான நேற்று தவெகதலைவர்விஜய்உறுதியேற்றார்.முன்னதாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.தவெக தலைவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள எனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என அத்தனை பேருக்கும் மகளிர் தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம் தானே? பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, எந்த சந்தோஷமும் இருக்காது தானே? என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.என்ன செய்வது? நாம் அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்று இப்போது தானே தெரிகிறது. அனைத்தும் இங்கு மாறக்கூடியதுதான். மாற்றத்துக்குரியது தான். கவலை படாதீர்கள். 2026-ல் நாம் அனைவரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம். அதற்கு இந்த மகளிர் தினத்தில் நாம் உறுதி ஏற்போம். எல்லா சூழ்நிலைகளிலும், உங்களுடைய மகனாக, தம்பியாக, தோழனாகஉங்களுடன்நான்நிற்பேன்.இவ்வாறுஅவர்கூறினார்.முன்னதாக, தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மகளிர் தினமான நேற்று அந்தந்த மாவட்டங்களில்தவெகவினர்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.ஒருசிலஇடங்களில்ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கியிருந்த நிலையில், பல பகுதிகளில்போலீஸார் அனுமதி மறுத்து இருந்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினரை பல இடங்களில் போலீஸார் கைது செய்தனர்.இதற்கு கண்டனம்தெரிவித்துவிஜய்வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையானபாதுகாப்பைஉறுதிசெய்யவேண்டியதுஅவசியமாகிறது. இதை வலியுறுத்தி, உலக மகளிர் தினத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர். ஆனால் மக்கள் தங்களின் தேவைகளுக்காக கூட போராட்டத்தை நடத்த கூடாது என்ற அராஜக போக்குடன் தமிழக அரசு,கழகமகளிர்மற்றும்தோழர்களைகைதுசெய்திருக்கிறது. இதைவன்மையாககண்டிக்கிறேன்.தமிழகம்முழுவதும்கைதுசெய்யப்பட்டுள்ளதவெகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Back to top button
Close
Close