fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மகாராஷ்டிராவில் அரை லட்சத்தை கடந்த கொரோனா தொற்று…!

Corona cases crosses 50000 in Maharashtra

மும்பை:

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 3வது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து 4வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,021 ஆக உள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 57,721 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,635 பேர் பலியான நிலையில் 14,600 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 16,277 பாதிப்புகளுடன் 2ம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 14,056 பேரும், டெல்லியில் 13,418 பேரும், ராஜஸ்தானில் 7,028 பேரும், மத்திய பிரதேசத்தில் 6,665 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 6,268 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close