fbpx
RETamil News

170km காலில் செருப்பின்றி உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனும் அவரின் குடும்பமும்

கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் காலில் செருப்பின்றி நடந்து வந்த சிறுவன் அவரின் குடும்பத்தை அங்கு வந்த போலீஸ் மீட்டு உணவு கொடுத்து ஒரு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

கட்டுமான தொழிலுக்காக கோவை சென்று தங்கி அங்கேயே வேலை செய்து இருந்த கூலி தொழிலாளி குடும்பம்,

ஊடரங்கு போடப்பட்டதால் வேலையின்றி அங்கேயே தங்கியிருந்தனர்.

மேலும் ஊடரங்கு நீடிக்கப்பட்ட கையிருப்பு கரைந்த நிலையில் இனி இங்கு இருக்க முடியாது என முடிவு எடுத்து தன் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர்.

கையில் பணமின்றி உண்ண உணவு இன்றி கோவையில் இருந்து தன் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு நடந்துசென்று.

பள்ளி விடுமுறை நாள் கோவையில் பெற்றோருடன் தங்கி இருந்த 7 வயது சிறுவன் சபரிநாதன் அவர்களுடன் நடந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே இவர்களைக் பார்த்த போலீஸ்.

அவர்கள் கூறியது உண்ண உணவு இல்லாமல் இரண்டு நாட்கள் நடந்தே வந்ததை அறிந்த போலீஸ் பசியோடு வந்தவர்களுக்கு உணவு கொடுத்து உதவினார்.

கொழுத்தும் வெயிலில், பசியோடு காலில் செருப்பு கூட இல்லாமல் 170 கிலோமீட்டர் நடந்தே வந்த சம்பவம்  அங்கிருந்தவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

அவர்களுக்கு உண்ண உணவு அளித்து , முக கவசங்களையும் கொடுத்து அவ்வழியில் வரும் கனரக வாகனங்களை நிறுத்தி அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர் சேலம் போலீசார்.

கொரோனா  என்ற வைரஸ் பாதிப்பில் பல இடங்களில் மனிதாபிமானம் தலையோங்கி எழுகிறது ..

மனிதன்  மதம் பிடித்து ஆடுவதும் இந்நாட்டில் தான்..
பசியோடு, பிழைக்க வழியில்லாமல் 2 நாள் நடந்து வரும் கொடுமையும் இந்த நாட்டில் தான்… இங்கு மனிதாபிமானம் உள்ள சிலரையும் இந்த மதம் பிடித்த பேய்கள் மாற்றிவிடாமல் இருக் வேண்டும்..

உதவுவோம் உயிர் உள்ள வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…

?  V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close