தேசிய கொடியை ஏற்றி பொதுமேலாளர் சுப்பாராவ் பேச்சு….
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் தேசிய கொடியை ஏற்றிவைத்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதில் அவர் பேசியதாவது;கடந்தாண்டில் தெற்கு ரயில்வே
செய்துள்ள சாதனைகள், நமது ரயில்வே குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் கூட்டு அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கின்றன. 2025-26ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் தொடக்க மொத்த வருவாய் ரூ.13,778 கோடி. இது முந்தைய ஆண்டைவிட 8.84% வளர்ச்சியாகும். நடப்பு நிதியாண்டில் ஜூலை 2026 வரை மொத்த வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஏற்கனவே 6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுநமது சரக்கு போக்குவரத்து செயல்பாடும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. முந்தைய ஆண்டில் கையாளப்பட்ட 41.731 மில்லியன் டன் சரக்குகளுடன் ஒப்பிடுகையில், 2025-26ம் ஆண்டில் தெற்கு ரயில்வே 42.184 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், ஜூலை 2026 வரை, நாம் 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம். தற்போதைய நிலவரப்படி, 43 மில்லியன் டன் என்ற நமது இலக்கை அடைவோம் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம்.பயணிகள் போக்குவரத்தும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. 2025-26ம் ஆண்டில், தெற்கு ரயில்வே 767.65 மில்லியன் தொடக்க பயணிகளை கையாண்டுள்ளது; இது முந்தைய ஆண்டை விட 4.7% வளர்ச்சியாகும். புதிய ரயில்களின் அறிமுகம், பல சிறப்பு ரயில்கள் மற்றும் தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் நமது ரயில்களின் நேரந்தவறாமை 91.3% ஆக பதிவாகியுள்ளது. இது இந்திய ரயில்வேயிலேயே மூன்றாவது மிகச்சிறந்த செயல்பாடாகும். 2025-26ம் ஆண்டிலும் ஜூலை 2026 வரையிலும், 39 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.பயணிகளின் வசதி மற்றும் பயணத்திறன் மேம்பாடு ஆகியவற்றிலும் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 100 ரயில்களில் நிரந்தரமாக 121 கூடுதல்டிகள்இணைக்கப்பட்டுள்ளன.அடையாளம் காணப்பட்ட 95 நிலையங்களில், 33 நிலையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. மேலும் 13 முக்கிய நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 345 நிலையங்கள் 100% மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுஉள்ளன.இதுவரை சுமார் ரூ.23.60 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 250 போதை பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறிய 2,008 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். நமது ரயில்வே பாதுகாப்புபடையினரின் தக்க சமயத்திலான தலையீடு மற்றும் தைரியமான செயல்களால் 38 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு தென்னக ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் பேசினார்..