fbpx
RETamil News

பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு புதிய சட்டம் – காஷ்மீர் கவர்னர் ஆட்சி

காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகின்றது.நேற்று காஷ்மீர் நிர்வாக கவுன்சில் கூட்டம் கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊழல் ஒழிப்பு திருத்த சட்டம் 2018 மற்றும் காஷ்மீர் குற்றவியல் திருத்த சட்டம் 2018 ஆகிய இரண்டு சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

அதில் காஷ்மீர் குற்றவியல் திருத்த சட்டம் 2018 -ஆம் சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதை தடுக்கும் வகையில் காஷ்மீர் குற்றவியல் திருத்த சட்டம் 2018 பிரிவு 354-இ கொண்டுவரப்பட்டுள்ளது. இது போன்ற சட்டம் நம் நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சட்டத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
Close
Close