fbpx
Others

மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்….

சென்னை மக்களே.. இன்னும் முடியல.. "ஒரு ஸ்பெல் வெயிட்டிங்.." அலர்ட் ...தமிழ்நாட்டில் கடந்த அக்.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று வரை தமிழகத்தில் சராசரியாக 284.8 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தில் 302.1 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் மழை இயல்பை விட 6% குறைவாகவே பெய்திருக்கிறது.இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “கிழக்கு அலை தாக்கத்தால், இன்று கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும். நேற்று மிதமான மழை டெல்டா மாவட்டங்களில் பதிவாகியிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை பொறுத்தவரை லேசான மழை பதிவாகியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என டெல்டா மாவட்டங்களில் நேற்றைவிட அதிகமான மழை இன்று பெய்யும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் காற்று குவிதல் இருப்பதால் மழையின் தாக்கமும் அதிகமாகஇருக்கும்.தேனி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் என டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். அதேபோல தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று அதிக கனமழை அல்லது மிக தீவிரகனமழைக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.வங்கக்கடலில் புயல் உருவாகி, அது நகர்ந்தால்தான் எந்த திசையில் அது பயணிக்கிறது என்பது தெரிய வரும். எனவே நவ.29 வரை நாம் காத்திருக்க வேண்டும். இன்றும் கொஞ்சம் நாட்கள் நமக்கு தேவை. புயல் வலுவானதாக இருந்தால் அது சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு சொட்டு மழை கூட பெய்யாது. அதுவே, பலவீனமாக புயல் எனில் சென்னையில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close