fbpx
HealthRETamil News

தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிக்க போலி மருத்துவர்கள் தான் காரணம் – நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவு

தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் போலி மருத்துவர்கள் தான் அதனை முடிவுக்கு கொண்டுவர தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி போலி மருத்துவர்களை கைது செய்ய சுகாதாரதுறை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பன்றி காய்ச்சல் , டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.மேலும் சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதையும் நாம் பார்க்கிறோம்.ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் அவர்களின் மரணங்கள் வெளிச்சத்துக்கு வரவில்லை. தற்போது மதுரை அரசு மருத்துவமணையில் பன்றி காய்ச்சல் நோயாளிகளுக்கு என்றே தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 6 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தங்களுக்கு காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவ கடைகளில் இருந்து மருந்தை வாங்கி சென்று உட்கொள்கின்றனர். அந்த மருந்தை சாப்பிட்டும் காய்ச்சல் சரியாகாத அபாய நிலையில் தான் அரசு மருத்துவமணையை நாடுகின்றனர். அதனால்தான் டெங்கு, பன்றி காய்ச்சல் மரணங்கள் அதிகரித்து உள்ளதாக
சுகாதாரத்துறை விசாரணையுள் தெரியவந்துள்ளது. அதனால் இத்தகைய மரணங்களை தடுக்க தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்தகுவதற்கு சுகாதாரத்துறை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close