வரும் 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மே மாதத்திற்க்கான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்; தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருக்கும் நிலையில் அன்றாடம் வேலை செய்து கூலி வாங்கும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றின் காரணமாக அவர்களின் வாழ்வாதாரமே இல்லாமல் போய் விட்டது. அதனால் தமிழக அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அரிசி அட்டை உடையவர்களுக்கு நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதை ஏப்ரல் மாதம் கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்தமாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் வழங்கப்பட உள்ள மே மாதத்திற்க்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் 27-ம் தேதி முதல் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி வழங்கப்பட உள்ள பொருட்களுக்கான டோக்கன்கள் நாளை, நாளை மறுநாள்
வீடுகளுக்கு வந்து கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.















